கா இளையராஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கா இளையராஜா |
இடம் | : பரமக்குடி |
பிறந்த தேதி | : 28-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 2833 |
புள்ளி | : 420 |
M.A., B.Ed. M.Phil .TAMIL TEACHER.6382179174
எமது எண்ணப்பதிவுகளை சுமக்கும் சுமைதாங்கியேrnவெற்றிடத்தில்விதைக்கிறேன் விலைக்கு போக அல்ல விரும்பி ஏற்போர் உள்ளம் விருட்சமாக .இளையகவி rnailayakavithai.blogspot.comrnrajailaya1981@gmail.comrnrajailaya1891@gmail.com
ஆடையை நீக்கிய பார்வையோடு நில்லாது
ருசிபார்க்கும் துரியோதனன்
வெண்ணிற ஆடைபூண்டமையால்
சமாதானம் என்று எண்ணினானோ ?
வெண்ணிற ஆடைக்கே
இந்தபாடுஎன்றால்
வண்ண ஆடைஎன்றால்
வம்பே வேண்டாம்
நானும் அரைகுறை
ஆடையோடு அலையபோய்கிறேன்
நடிகைபோல் ....................
இளையகவி
முகச்சுருக்கம்
வற்றிய களர்நிலக்கோடுகள்
வெள்ளை உரோமங்கள்
அமைதியின் சின்னங்கள்
அழிந்த பற்கள்
ஆரம்ப குழந்தைநிலை
தடையற்று வானிலே மிதக்கின்ற மேகத்தை
தடுப்பார் யாருமில்லை
கார்மேகத்தை கரத்தால்
கலைப்போர் உண்டோ ?
வானவில்லை வளைத்து
அம்பு நாண் தொடுப்போர் உண்டோ ?
வானச் சேலையை மடித்து
மானத்தை மறைத்த
மங்கைகள் உண்டோ ?
காட்டிலே விரிந்த
மனமிகு மல்லிகை மணத்தை
கைபொத்தி அடைப்பாரில்லை
ஆழ்கடலில் அலையும் மீனின் கண்ணீரை
கரைதனில் நின்று கண்டோர் உண்டோ ?
காம இச்சையில் கரம்தொடும்
பரத்தை உள்ளத்தை
இரவில் இரக்கத்தோடு பார்த்தோர் உண்டோ ?
இரவு பகல் பாராது ஓயாது உழைத்து
உயர கட்டிய தேன்வீட்டை
தீண்டிப்பார் .................
பெண்தேனியின் போர்குணம் உமக்கு புரியும் .
தடையின்றி ஈழ வையகம் தந்தோன்
உரிமையை ,உணர்வை
தடைச்செயல் தர
இவ்வுலகில் நிரந்தரமானது எது? ஏன்?
அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
உனக்காக...
தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..
அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை அனுபவிக்க.........
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
அவரது வியர்வையில்
யுகப் பூக்களும்
நீராடிப் போகிறது
அவரது புன்னகையில்
பறவைகளும்
பசியாறிப் போகிறது
அவரது கண்ணீரில்
எரிமலைகளும்
பனி மலைகளாகிறது
அவரது தூக்கங்கள்
ஓடுகின்ற நதிகளாய்
ஓய்வினை மறந்தது
அவரது காலடிகளை
உலகின் அதிசயமாய்
வரலாறு நினைக்கின்றது
அவரது சோகங்கள்
பிள்ளையின் முன்
மார்கழி நிலவானது
இறைவனிடம் இவர்
யாரென்று கேட்டேன்
'தாயின் அவதாரம்'
என பதிலுரைத்தான்
புரியவில்லை
இறைவா என்றேன்
ஆலயங்களில் உயர்ந்த
ஆலயம் என்றான்
மறுமுறையும்
புரியவில்லை இறைவா
உன் உதிரத்தின் உயிர்
ஓவியம் என்றான்
கண் கலங்கி நின்றேன்
நிழலில் அவர் முகம்
இறைவனை தே
மாணாட்கர் மனக்கண்
அறியாமை அகற்றும்
அற்புத பணி .
ஒழுக்கத்தை போதிக்கும்
உன்னத பணி .
கற்றலில்
கசடு களையும்
கண்ணிய பணி .
அகிம்சை உணர்வை
உள்ளத்தில் பதிக்கும்
உயரிய பணி .
துலாக் கோல் போல்
மாணாட்கரிடம் சமநிலை
நடத்தும் நுண்ணிய பணி .
சாதி ,மத வேறுபாடில்லா
சமத்துவத்தை போதிக்கும்
உயரிய பணி .
கற்றலை
அகத்தில் நிறுத்தி
புதுமையாய் ,எளிமையாய்
இன்முகத்துடன் அவன் வசம்
உட்புகுத்தும் நுட்பமான பணி .
வேற்றுமை நீக்கி
ஒற்றுமை உணர்வை
உள்ளத்துள் ஊட்டும்
உணர்வு பூர்வ பணி .
கற்றல் சுமைக்கண்டு
கலங்கும் நெஞ்சங்களை
தட்டிக்கொடுத்து
தடைகளை அகற்றும்
அழகிய பணி .
கடமை ,கண்ண
பச்சை மெத்தைகள்
விரித்த புல்வெளிதளங்கள்.
வெள்ளை தாவணியை
விட்டெறியும் நீர்விழ்ச்சி.
கருப்பு மேனியில்
உயர்ந்த மரங்கள்.
சிவப்பு வெட்கத்தில்
அந்தி வானம்.
சிறகடித்த சில்மிஷ
சத்தத்தோடு காதல்பறவைகள்.
இப்படியான அழகான
இயற்கையான சொர்க்கம்.-இந்த
இனிமையான தனிமையில்
என்னோடு அவள்.
அவள் விரல்களோடு
பிணைந்த என் விரல்கள்.
தோள்கள் இரண்டும்
சிநேகம் கொள்ள
இதயங்கள் இரண்டும்
மெளன சங்கீதம் பாட..
இதழ்கள் சொல்ல துடிக்கும்
காதலை சொல்ல துணியாமல்
தயங்கி தயங்கி -மனம்
துடி துடித்திருந்த நேரம்
என்னை கேட்காமலே
எனது காதலுணர்வை
தூது அனுப்புகிறது
அவளின் கயல்விழியிடம்
எந்தன் காந்தவிழிகள்.
வ