முகவியரசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முகவியரசன் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 20-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 323 |
புள்ளி | : 25 |
காற்றில்
வந்த காகிதம் - அவள்
எழுதும் போதும்
வலி இல்லை
எழுதிவிட்டு
போகும் போதும்
வலி இல்லை - அதை
நின்று
வாசிக்கும் போது
வலி உண்டாயிற்று....
எதையும்
உணர்ந்து செய்தாலும்
உணராமல் செய்தாலும்
திகைப்பான
வாழ்க்கையில்
எதிர்பார்ப்புகள்
சலிக்காமல்
வந்து கொண்டேவும் இருக்கும்
அது
மாயமாக
மறைந்து கொண்டேவும் இருக்கும்....
வெகுநேரமாகி விட்டது
இடைவிடாத பயணத்தில்
காரணங்களைத் தேடி
சுற்றித்திரிந்த வாழ்க்கையில்
எதையும்
தனக்காக அடையாளப்படுத்திக்கொள்ள
முடியாத சூழ்ச்சமத்தில்
பிரண்டு பித்துப்பிடிப்பது
வேதனை....
வெகுநேரமாகி விட்டது
இடைவிடாத பயணத்தில்
காரணங்களைத் தேடி
சுற்றித்திரிந்த வாழ்க்கையில்
எதையும்
தனக்காக அடையாளப்படுத்திக்கொள்ள
முடியாத சூழ்ச்சமத்தில்
பிரண்டு பித்துப்பிடிப்பது
வேதனை....
ஒவ்வொரு படிக்கட்டுகளாக ஏறும்போது
நெற்கதிர்கள்
நெஞ்சினை
நெறிஞ்சு முள்ளாய்க் குத்தியது
மதியகாலச் சூரியனின் முகம்
உடல் கறுத்து
வியர்வையில் குளித்த
அப்பனின் தினம் அது
மஞ்சள் பூத்த மங்கலம்
பன்னருவாளில்
பதம் பார்த்து
பரபரப்பாக இயங்கிய நேரம்
காசெல்லாம் உரமாக
வயல்காட்டில்
வளைபோல் வீசியெறிந்து
மூச்சுவிட்டப் பயிர்
இன்று
அறுவடை நேரம்
கருவிகள்
கதிர்களைக் கணக்கச்சிதமாக
கொலைசெய்து வருகின்றன
வயல்காட்டில்
மூலையில் பல சாக்குகள்
நிரம்பியிருக்கிறது
மஞ்சள் போர்த்திய உடல்களால்
வார்த்தைகளில் ஓர் பதற்றம்
எல்லாம் முடிந்ததால்
பணம்
கையடைப்பு நேரம்
அறுக்கும் கருவியிடம் கொடுத்
கார் காலக் காற்று தாங்கி நீ வர,
கரியன்ன நிறம் கொண்டுதான் வர,
கவிஞர்கள் மனம்தான் உனைக் கண்டு
கதிரவன் கண்ட தாமரை போல்
மகிழ்ச்சி கொண்டு பாராட்ட.....
இருண்டு, திரண்டு, உருண்டு வரும்
இனிமை நிலை கொள்ள வைக்கும் முகிலே!
காய் போல மனம் கொண்ட பலர் நடுவே
கனி மனம் கொண்ட கன்னி உலா போல
எரி தணல் கதிரவன் வெம்மை தணிக்க
எங்கள் மனம் இனிமை கொள்ள வரும் முகிலே!!
விரைவாக நீ வந்தும் மண்ணில்
மழையாய் விழாமல் போவதும் ஏனோ??
பாவம் மிகுந்த பலர் நடுவே
நீ விழுவது பாவம்
என்று எண்ணினாயோ??
கார் காலக் காற்று தாங்கி நீ வர,
கரியன்ன நிறம் கொண்டுதான் வர,
கவிஞர்கள் மனம்தான் உனைக் கண்டு
கதிரவன் கண்ட தாமரை போல்
மகிழ்ச்சி கொண்டு பாராட்ட.....
இருண்டு, திரண்டு, உருண்டு வரும்
இனிமை நிலை கொள்ள வைக்கும் முகிலே!
காய் போல மனம் கொண்ட பலர் நடுவே
கனி மனம் கொண்ட கன்னி உலா போல
எரி தணல் கதிரவன் வெம்மை தணிக்க
எங்கள் மனம் இனிமை கொள்ள வரும் முகிலே!!
விரைவாக நீ வந்தும் மண்ணில்
மழையாய் விழாமல் போவதும் ஏனோ??
பாவம் மிகுந்த பலர் நடுவே
நீ விழுவது பாவம்
என்று எண்ணினாயோ??
............
நான் உனக்காக என்று
முதல் முத்தத்திற்குத் தவம் கிடந்த
இதழ்கள் ஒன்றல்ல
சோலைகளின் மத்தியில்
கன்னிக்கழியாமல் காத்துக்கிடக்கும்
கன்னிகள்
இங்கே ஏறாலம்
நறுமணங்கள்
சூழ்ந்து பிண்ணிய வளையில்
சிக்கிக் கொள்வானோ? என்னவோ?
ஆரவாரப்பட்டு
ஆனந்த கூட்சப்பட்டு
காலைப்பொழுதில்
கண் விழித்துக் காத்துக்கிடக்கிறேன்
அமுதமெனும் தேனினை
உள்வைத்து
இப்போது
அவனை எதிர்பார்த்து
பூத்துக் குலுங்குகிறேன்
வருவானா?
காணாமல் போன நினைவுகள்
காணாமல் போன கதைகள்
காணாமல் போன கனவுகள்
காணாமல் போன உண்மைகள்
காணாமல் போன காயங்கள்
காணாமல் போன காதல்
காணாமல் போன உணர்வுகள்
காணாமல் போனதே
காத்திருந்த காலங்களில்
கதறி அழுத நொடிகள் மறந்து
மீண்டும் வந்து சென்று
மீள முடியாமல் சிக்கி கொண்டேன்
புதைக்குழி என்ற கடந்த கால
ஞாபகத்தில்........
..