சோலைப் பூக்கள்

நான் உனக்காக என்று
முதல் முத்தத்திற்குத் தவம் கிடந்த
இதழ்கள் ஒன்றல்ல
சோலைகளின் மத்தியில்
கன்னிக்கழியாமல் காத்துக்கிடக்கும்
கன்னிகள்
இங்கே ஏறாலம்
நறுமணங்கள்
சூழ்ந்து பிண்ணிய வளையில்
சிக்கிக் கொள்வானோ? என்னவோ?
ஆரவாரப்பட்டு
ஆனந்த கூட்சப்பட்டு
காலைப்பொழுதில்
கண் விழித்துக் காத்துக்கிடக்கிறேன்
அமுதமெனும் தேனினை
உள்வைத்து
இப்போது
அவனை எதிர்பார்த்து
பூத்துக் குலுங்குகிறேன்
வருவானா?