வித்தியாசமானவள் வேல்விழியால் மட்டுமல்ல

வித்தியாச மானவள் வேல்விழியால் மட்டுமல்ல
புத்தகத் தின்பக்கம் போல்திரும்பும் பேச்சினால்
எத்தனை செய்தி இவள்சொல் கிறாள்தினம்
தத்துவ ஞானமுதல் தென்றல் கவிதைவரை
அத்தனையும் நல்கும் அறிவுப்பெண் பாரியிவள்
நித்தம் வரும்காதல் நூல்