அத்தமக ரத்தினமே
அத்தமக ரத்தினமே நான்
ஆசை வச்ச சித்திரமே
உன் காதல் என்னில் பத்திரமே
என் மனசு நீ வாழும் சத்திரமே
உன்னால் தான் கண்ணே
கனவில் கூட உளறி வெச்சேன்
கவிதை எழுதத் தெரியாம
உன் பெயரை சொல்லி வச்சேன்
கண்ணால காதல் சொல்லும்
காலமெல்லாம் போயே போச்சு
கடுதாசி போட்டு காதல் எல்லாம்
மலையேறி ரொம்ப நாளாச்சு
உன் காதல் என்னில் உண்டு
என் காதல் உன்னில் உண்டு
நம் காதல் என்றான போது
உனக்கும் எனக்கும் சுவாசமாச்சு
விடிஞ்சா கனவு கலைந்து போகும்
எல்லா நாளும் மறந்து போகும்
பூமி உள்ள காலம் மட்டும்
நம்ம காதல் சேர்ந்து வாழும்