காட்சி பிழைதான் காதலோ

நீயின்றி யேதடி என் காதல்
தினம் தினம் உன் விழி மோதல்
நெஞ்சம் கணக்குதடி என்னுள்
என்றும் இனிக்கும்படி உன் சொல்

காட்சி பிழைதான் காதலோ
கானல் நீர்தான் காதலோ
என் கவிதைகள் வாடுதடி
அது உன்னை தேடுதடி...

நேசம் குறையவில்லை என்னில்
பாசம் சரிய வில்லை எப்படி
சொல்லிட உன்னிடம் காதல்
வார்தகைகள் வரவில்லை...

விழிகளின் சதியோ காதல்
பொய்யின் உருவமா காதல்
போலி சிரிப்பா காதல்
ஒரு வித நெருப்பா காதல்

உனக்கு ஏன் புரியவில்லை
நடிதிட ஒன்றுமில்லை
உனை படிதிட வழியுமில்லை
இறந்திட முடியவில்லை
என்னால் முடியவில்லை...

எழுதியவர் : ருத்ரன் (23-Feb-25, 10:33 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 35

மேலே