மா மசாலா

மா மசாலா

வயிற்று எரிச்சலை
சரிகட்ட
எடுத்த முதலுதவி
காற்றோடு காய்ச்சிவந்த
நல்லெண்னை புது நிலவு
இழுத்துச் சென்றது
இதுவரை கை நினைக்கா
கம்பத்து கேப்…..

பட்டியலை புரட்டிட
பட்டது கண்ணுக்கு
தோசையின் சிகரம்…ஆஹா..
மசாலா வை உள்வாங்கி
இருண்ட கண்கள்
இலையை மோத
வந்து விழுந்தது
வீரியத்துடன்
குட்டை கொத்து சட்டி
கூடவே அணிவகுத்து !

பிய்து பார்த்து தொய்க்க
துவண்ட மாவு
தொடர்கதை எழுத
மண்டியிட்டு புதருக்குள்ளெ
தவமேற்ற மசாலா
எங்கோ செல்லத் தவறி
வந்துவிட்டதை
நாக்கு கண்டுபிடித்து
சர்வரிடம் கேட்கையிலே
பூரிக்கும் பாயி சப்பாத்திக்கும்
இரு வீட்டார் சம்மதத்துடன்
இது இனிதே
இங்கு மறைத்து வழங்கப்படும்…. !

ஆக…
அடிப்படையில் அரிசி மாவு
கோதுமை மாவு
இவைகளின் கூட்டமைப்பிற்கு
ஆதரவு பெருத்துவிட்டது
எனெனில் இப்போ
அண்டை நாட்டிலும்
இந்த பரிவர்த்தனையை
விலாவாரியாக பட்டுவாடா பார்க்க…
கூர்ந்து
கேள்வி கேட்ட நாதியில்லை !

உண்டால் சரி
பசி தீர்த்தால் சரி
மீண்டும் வரதே
திரள் கடல் கண்டு
சகலகலா வல்லவன்
செப் ஏற்றுமதியை சரி செய்ய
சுடும் சட்டி செய் தவம்
இன்னும் உலகம் சுற்றி வரும்
வாடிக்கை வாடாமல்
நா வழிக்க….

எழுதியவர் : மு.தருமராஜு (13-Apr-25, 5:50 pm)
பார்வை : 23

மேலே