என்நெஞ்சம் எழுதுகின்ற கவிதையில் நீ தேவதை

தென்றலெழு தும்கவிதை யில்பூக்கள் தேவதை
பொன்மாலை யின்கவிதை யில்வானம் தேவதை
தென்பொதிகை யின்கவிதை யில்தமிழே தேவதை
என்நெஞ்சம் எழுதுகின்ற கவிதையில்நீ தேவதை

----காய் காய் காய் விளம் என்ற வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-25, 8:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே