ஒன்னுதான்…
ஒன்னுதான்….
வீட்டுக்காரர் : கார் மேகம்….ரெண்டு நாளாக்கி கிராமத்துக்கு போர வேல இருக்கு ..அந்தி சாய வந்து
முன்கேட் சாவிய வாங்கிக்கோ ..சரியா….
கார் மேகம் : சாயங்காளம் ஒரு அஞ்ஜு மணிக்கு வந்திடவா ?
வீட்டுக்காரர் : ஆ…சரியா வந்திடு…ரெண்டு நாளக்கி இங்கயே தங்கிடனும்…
கார்மேகம் : எஜமா..கேட் சாவியொட வீட்டு சாவியும் கொடுத்தா தான இங்க தங்கிக்க முடியும்….
வீட்டுக்காரர் : நீ பத்து வருசமா இருக்க…வீட்டு கேட்டுக்கும் வீட்டு பூட்டும் ஒன்னுதான்னு
தெரிஞ்ஜிக்கலெயெ …..
கார்மேகம் : பத்து வருசத்தல இன்னக்கி தான வீட்டலெயே தங்கிக்கெ சொல்லறீங்க !
வீட்டுக்காரர் : பத்து வருசமா ஒரு காவக்காரன வேலெக்கி வெச்சிட்டெனெ…வந்த உடனெ ரெண்டு
பூட்டயும் மாத்திடனும்….