தெள்ளிய நீரோடை அள்ளிப் பருக அழகி வந்தாள்

மல்லிகைத் தோட்டம் மணக்கும் மலர்க்கூட்டம்
சில்லென்ற தென்றலில் சிந்துதே தேனினை
தெள்ளிய நீரோடை துள்ளும் குளிர்நீரை
அள்ளிப் பருக அழகிவந் தாள்விழியில்
துள்ளு திரண்டு கயல்


மல்லிகை யின்மனம் நோகாமல் பூவினை
மெல்லப் பறித்தாள் கயல்

கூந்தலில் சூடி குதூகல மாய்நடந்தாள்
பூந்தளிராள் புன்னகை யில்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-25, 11:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே