என் தந்தை
என் தந்தை...
முட்களையும் பூக்களாய்
நினைத்து அணுகியதில்
வாழ்வின் ஒவ்வொரு மணித்
துளியும் அவருக்கு வசமானது..
மொத்த வானமும் பூமியும்
நமக்கானது என்ற உணர்வில்
தடைக் கற்களைப் படிக்
கற்களாக்கிக் கொண்டார்..
சரித்திரத்தில் இடம் பிடிக்க
அவர் வாழவில்லை..
அவரை அவருக்கு பிடிக்க
வாழ்ந்தார்.. அதனால் அவரை
எங்கள் எல்லோருக்கும் பிடித்தது..
என் தந்தையோடு பேசுவதும்
அவர் பேசுவதைக் கேட்பதும்
நான் வாழ்ந்த பொழுதுகளில்
வசந்த பொழுதுகள்..
👍😍🌹❤️

