இரா சுந்தரராஜன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இரா சுந்தரராஜன்
இடம்:  வீரசிகாமணி, சங்கரன்கோவில
பிறந்த தேதி :  16-Jan-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Oct-2016
பார்த்தவர்கள்:  376
புள்ளி:  84

என்னைப் பற்றி...

வாழ்வெனும் ஓவியம்rnவரையக் கற்றுக்கொண்டவன்rnஆனாலும் இதுவரைrnவரைந்த ஓவியம்rnசில இடங்களில் மிகையாகவும்rnசில இடங்களில் குறைவாகவும்rnஇருப்பதை தெரிந்து கொண்டவன்rnrnஇதுவரை நான் வாழ்ந்த rnவாழ்க்கை எனும்rnவெற்றி தோல்வி புத்தகத்தில்rnநான் எடுக்கும்rnஅழகிய குறிப்புகள் rnஇனி வாழும் வாழ்விற்கு rnவழி காட்டட்டும்...rnவெற்றி இருப்பது rnசேரும் இடத்திலல்லrnவாழும் விதத்தில்...rn rn

என் படைப்புகள்
இரா சுந்தரராஜன் செய்திகள்
இரா சுந்தரராஜன் - இரா சுந்தரராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2018 11:02 am

கவிதை...
சோகங்களுக்கு மருந்து
தடவிச் செல்லும்...

சாதனைகளுக்கு பாராட்டுப்
பத்திரம் வாசிக்கும்...

காதலுணர்வில் போதைகொண்டு
படிப்பவரையும் போதை
கொள்ளச் செய்யும்..

நட்புக்கு நளினம் சேர்க்கும்...
சிக்கல்களுக்கு சிக்கெடுக்கும்...

கவிதைக்கு பல்வேறு
வடிவங்கள்...

தன்பக்க நியாயத்தை
தக்கவைக்க முயலும்...

எழுதிய கவிதைகளிலும்
எழுதாத கவிதைகள்
நிறைய உண்டு...

முகாரி முதல் மோகனம் வரை
துக்க நிகழ்வுகள் முதல்
இன்ப நினைவுகள் வரை
எதுவானாலும் தன் முத்திரை
பதித்துச் செல்லும்...

கவிதைகள்...
யாப்பிலக்கணம் பார்ப்பதில்லை
எனினும் வாழ்விலக்கணம் பிசகாது..

மனிதன் தோன்றிய காலம்தான்
கவி

மேலும்

நன்றி புதுகை செநா 23-Mar-2018 9:49 am
''யாப்பிலக்கணம் பார்ப்பதில்லை எனினும் வாழ்விலக்கணம் பிசகாது.. '' உண்மைதான் நட்பே ...................... 22-Mar-2018 9:23 pm
இரா சுந்தரராஜன் - மாலதி ரவிசங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2018 10:55 am

கானல் நீரில்
காகித கப்பல்
கரை காண
காத்திருக்கிறது!

மேலும்

நன்றி! 22-Mar-2018 9:45 pm
அருமை ......... 22-Mar-2018 7:21 pm
நன்றி! 21-Mar-2018 11:59 am
அருமை 21-Mar-2018 11:04 am
இரா சுந்தரராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 11:02 am

கவிதை...
சோகங்களுக்கு மருந்து
தடவிச் செல்லும்...

சாதனைகளுக்கு பாராட்டுப்
பத்திரம் வாசிக்கும்...

காதலுணர்வில் போதைகொண்டு
படிப்பவரையும் போதை
கொள்ளச் செய்யும்..

நட்புக்கு நளினம் சேர்க்கும்...
சிக்கல்களுக்கு சிக்கெடுக்கும்...

கவிதைக்கு பல்வேறு
வடிவங்கள்...

தன்பக்க நியாயத்தை
தக்கவைக்க முயலும்...

எழுதிய கவிதைகளிலும்
எழுதாத கவிதைகள்
நிறைய உண்டு...

முகாரி முதல் மோகனம் வரை
துக்க நிகழ்வுகள் முதல்
இன்ப நினைவுகள் வரை
எதுவானாலும் தன் முத்திரை
பதித்துச் செல்லும்...

கவிதைகள்...
யாப்பிலக்கணம் பார்ப்பதில்லை
எனினும் வாழ்விலக்கணம் பிசகாது..

மனிதன் தோன்றிய காலம்தான்
கவி

மேலும்

நன்றி புதுகை செநா 23-Mar-2018 9:49 am
''யாப்பிலக்கணம் பார்ப்பதில்லை எனினும் வாழ்விலக்கணம் பிசகாது.. '' உண்மைதான் நட்பே ...................... 22-Mar-2018 9:23 pm
இரா சுந்தரராஜன் - இரா பாக்கியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2018 2:37 am

நட்பு
நேசித்தது !!

நட்புக்கும் மூன்று எழுத்து
காதலுக்கும் மூன்று எழுத்து
என்பது நம் இருவரும்
ஆனால்
நம் உறவினை காதலா நட்பாக
என் ஆராய்ந்த போது
நாம் நேசிப்பது நம்மை இல்ல
நம் நட்பை தான் ......!!!
இவன்
இரா பாக்கியராஜ் ‌...

மேலும்

இரா சுந்தரராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 12:42 pm

இன்று சர்ச் ஒன்று
சந்தோசம் கொண்டது...
லாரன்ஸ் பிறந்தநாள்
பிரார்த்தனை நிகழ்த்த...

தலைமுறைகள்
பல வேண்டும்...
தன் நிலை மாற...
ஒரே தலைமுறையில்
கற்ற கல்வியால்
தன் நிலை மாற்றியவன்
இந்த லாரன்ஸ்...

கணிதம் இவனுக்கு
கை கொடுத்தது
பொறியியற் கல்லூரி
செல்வதற்கு...

கல்லூரி இவனுக்கு
கை கொடுத்தது
பொறியியல் பட்டம்
பெறுவதற்கு...

பெற்ற பட்டம் இவனுக்கு
கை கொடுத்தது
அரசு வேலை சேர்வதற்கு..

அரசு வேலை இவனுக்கு
கை கொடுத்தது
இவன் திறமையை
மாநகராட்சி
பயன்படுத்துவதற்கு..

முயற்சிதன் மெய்வருத்தக்
கூலி தரும் குறளுக்கு
நிகழ் காலச் சான்று
நினைத்ததை முடிக்கும்
நண்பன் லாரன்ஸ்...

மேலும்

இரா சுந்தரராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 3:25 pm

மார்ச் பதினைந்து...
அது.. ஆங்கில தேதி...

செந்தமிழோடு
உறவாடும் சாகுல்...
நாஞ்சில் தமிழோடு
உறவாடும் பொன்ஸ்...
பொதிகைத் தமிழோடு
உறவாடும் செல்வா...
ஆகியோருக்கு இன்று
பிறந்தநாள் என்பது
சிறப்புச் செய்தி...

நிறையபேர் தமிழை
வாசிக்க மட்டுமே செய்யும்போது
இவர்கள் தமிழை
சுவாசிப்பவர்கள்...

சாகுல் ஹமீது...
பல்வேறு தளங்களில்
விருத்தங்கள் புனைவான்...
கருத்தாடலில் சிலசமயம்
வருத்தங்கள் கொள்வான்...
எனினும் நட்பெனும்
ஒற்றை நூலில்
ஓராயிரம் நண்பர்களை
இவனது நட்பு மாலையில்
கோர்த்துக் கொள்வான்...
இவனது தினசரி
வாழ்த்துக்களில்
சக்தி ஒன்று இருக்கிறது...
அதில் வெற்றிக்கு நிறைய
யுக்தி இரு

மேலும்

இரா சுந்தரராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2018 9:26 am

மார்ச்...
முதல் நாளில் பிறந்த
முதல்வனே... முனைவனே..
ராஜேந்திரனே...
உனது இனிய இயல்பில்
முதல்வர்களுக்குள்
முதல்வன் ஆனாய்...

கனிவான கற்பித்தலில்
நிறைவான நிர்வாகத்தில்
மாணவ இதயங்களில்
ராஜேந்திரன் நீ...
ராஜாதி ராஜாவானாய்...

சிறுவாணியின் இனிப்பிலும்
இனிமையானது இவனது
பழகும் விதம்... எப்போதும்
அது ஒரே விதம்...

சோழன் ராஜேந்திரன்
சோழநாட்டை ஆண்டான்..
இந்த பாண்டியன் ராஜேந்திரன்
சேர சோழ பாண்டிய
பல்லவ தேசங்களின்
ஒட்டு மொத்த மாணவ
தேசங்களை ஆள்கிறான்...

அவன் கங்கை கொண்ட
சோழன்..
இவன் சேரநாடு கொண்ட
பாண்டியன்...

கோவை இவனாலும்
வளர்ச்சி கொள்கிறது இப்போது
இவனளிக்கும் சீரிய பல

மேலும்

இரா சுந்தரராஜன் - Rathnakumar Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2018 4:54 pm

எல்லோரும் பேனாவிற்கு
மை நிரப்பி
எழுதுவார்கள் - நானோ
உன் ஞாபகத்தை
நிரப்பிதான் எழுதுகிறேன்
இந்த கவிதையை..!!

நீ ரசித்தாய்
கற்சிலை கூட வெட்கப்பட்டது

நீ சிரித்தாய்
பிறந்துவிட்டது எட்டாவது ஸ்வரம்

நீ பட்டு உடுத்தினாய்
பட்டுப்பூச்சி எல்லாம் பட்டுப்போய்விட்டது
உன் அழகைப் பார்த்து

நீ நகம் கடித்தாய்
விழுந்துவிட்டது குட்டி பிறைநிலா

நீ கீழே விழுந்தாய்
ஒன்பது கிரகங்களும் அதிர்ந்துவிட்டது

நீ என்னை சாய்ந்து பார்த்தாய்
இந்த பூமியோ மேலும்
23.5டிகிரி சாய்ந்துவிட்டது

நீ இனிப்பு உண்டாய்
யாரையும் கடிக்காத பிள்ளையார்
எறும்பு கூட இனிப்புடன் சேர்த்து
உன்னையும் கடித்தவிட்

மேலும்

அருமை 14-Jan-2018 5:28 pm
இரா சுந்தரராஜன் - ஜெகன் G அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2018 12:01 pm

கிடைத்த வேலைக்கு
ஊதிய
உயர்வு கேட்டு
சாலை மறியலில்
பதவிதாரிகள்
ஒருபக்கம்

எப்படியும்
வேலை கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
வேலை வாய்ப்பு
அலுவலகத்தில்
பட்டதாரிகள்
மறுபக்கம்

இறைவன் யார்பக்கம்???

மேலும்

நிதர்சனம் தான் நட்பே... 12-Jan-2018 8:35 pm
நியாயத்தை அழகாய்ச் சொல்கிறது இந்த அற்புதக் கவிதை... பாராட்டுதல்கள்... 10-Jan-2018 12:05 pm
இரா சுந்தரராஜன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2017 11:22 am

மொட்டவிழ்ந்த பூக்களோ வாசமல ரானது
கட்டவிழ்ந்த கம்புகள் பந்தல்கா லானது
இட்டபந்த லின்கூரை சிற்பவரங் கானது
மட்டில்லா உன்னழகு என்சொந்த மானது
கட்டழகன் நானுனது சங்குக் கழுத்தினில்
கட்டிய தாலி கழுத்தினில் மாங்கல்யம்
பொட்டு புனிதம் எனும்பெயர் பெற்றிட
கெட்டிமே ளம்முழங்கும் நாள் !

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய சுந்தரராஜன் 18-Dec-2017 11:29 am
அருமை 18-Dec-2017 11:27 am
இரா சுந்தரராஜன் - இரா சுந்தரராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2017 9:30 pm

புலனங்கள் பல
என் மொபைலில்
இருந்தும் அகம்
மகிழ்வது சிலவற்றில்தான்...

தூக்கம் வரா இரவுகள்
வலையொளியில்
மழைக்கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சலாடியது
கமல் ஸ்ரீதேவியோடும்...
விழியே விழியே
உனக்கென்ன வேலை
எம்ஜிஆர் ஜெயாவோடும்...
அறிஞர் அண்ணாவின்
அழகு தமிழோடும்...
இன்பமாய்க் கழியும்...

வட இந்திய நடிகைகள்
படவரிகளில் வந்து
போவதுண்டு அவர்களின்
முகவரிகள் தற்காலிகமாய்
வெளிநாட்டு அழகு
கடற்கரைகளுக்கு
இடம்பெயரும் பொழுது...

அளாவி பயன்பாடு பற்றி
கேள்வி ஞானம் உண்டு
எனினும் யாரிடமும்
அளாவியதில்லை இதுவரை...

வெளிநாடு நண்பர்கள்
அவ்வப்போது தொடர்பில்
வந்து போவதுண்டு
பற்றியம் துணைகொண்டு..

மேலும்

கலைகளின் நுட்பம் என்றும் முதன்மையான மாற்றம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 6:39 pm
இரா சுந்தரராஜன் - இரா சுந்தரராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2017 10:07 am

ஏதோ ஒருநாள் அல்ல
ஒவ்வொரு நாளும்...
எல்லா நாளும் வாழ்வின்
இமயம் தொடும் பயணத்தின்
இன்றியமையாத நாள்...
இதுவும் கடந்து போனாலும்
இந்த இனிய நாளின்
பங்களிப்பில் இமயம்
நெருங்கட்டும்...
காலை வணக்கம்...
😀👍🙋🏻‍♂🙏🚶🏻

மேலும்

கடந்து போன பாதையில் கிடக்கின்ற பயணங்கள் வசந்தத்தை தேடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Sep-2017 6:47 pm
நன்றி. 28-Sep-2017 12:19 pm
நைஸ் 28-Sep-2017 10:15 am
மேலும்...
கருத்துகள்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

user photo

இரா இராஜசேகர்

வீரசிகாமணி , சங்கரன்கோவில
வைத்தியநாதன்

வைத்தியநாதன்

பெரியகுளம்

பிரபலமான விளையாட்டுகள்

மேலே