வசீகர காலம்

சங்கமேஸ்வரி...
கடற்கரை நகரம்
வீரத்தின் விளைநிலம்
முத்து நகரில் தொடக்கம்
அவரது நல்ல காலம்...

குன்னூர் மலைப் பிரதேசம்..
மக்கள் அவ்வப்போது
சென்று வரும் சுற்றுலா ஸ்தலம்
வருஷம் முழுமையும்
அங்கு வசந்த காலம்...

எப்போதும் அங்கேயே குடியிருந்து
குதூகலித்து விளையாடிய
பொன் மாலைப் பொழுதுகள்
வசீகர காலம்...
அது சங்கரியின் இனிமைக் காலம்

காடுகள் மலைகள்
மேடுகள் பள்ளங்கள்
செடிகள் கொடிகள் மரங்கள்
தேயிலைத் தோட்டங்கள்...
தலைமை தாங்கிய பச்சை நிறம்
மலர்களின் கண்கவர் நிறம்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உத்வேக காலம்..

வாழ்ந்திருந்த இல்லம்
பூக்களின் வாசம்..
படித்திருந்த பள்ளிக்கூடம்..
புத்தகங்களின் வாசம்...
அது துள்ளித் திரிந்த
இளமைக் காலம்...

பொறியியல் படிப்பில்
தமிழகம் முழுமைக்கும்
இடங்கள் ஆயிரம்.. அது
எம்ஜிஆர் ஆண்ட பொற்காலம்

பாளையங்கோட்டை கல்லூரி
பொறியியல் கல்வி பெற
சங்கரி பெற்றார் அங்கு ஓரிடம்
பசுமை நிறைந்த நினைவுகள்
பழகிக் கழித்த தோழமை
நினைவில் நிலைத்த காலம்..

திருவின் திருமதி சங்கரிக்கு
தமிழகத்தின் தலைமையிடம்
சென்னை இப்போது வாழ்விடம்
சங்கரியை.. திருமலையை
வாழ்த்தட்டும் வையகம்
நீண்ட நெடிய காலம்...

தோழி சங்கரிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்..
வசந்தங்கள் வாழ்த்தும்
வானமும் வசப்படும்
இக்காலம்.. முக்காலம்..

🌷🪷👍👏😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (5-Aug-23, 10:18 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : vaseegara kaalam
பார்வை : 207

மேலே