நன்மதி வெண்பா - நூல் - பாடல் 89
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
சொல்லியமாற் றத்துயிராந் தூய்மை பெறுவாய்மை
மெல்லியற்குச் சீவன் மிகுமானம் - அல்லலிலாக்
கூட்டுநவார் நன்மதியே கோட்டைக் குயிர்வீரர்
சீட்டிற் கெழுத்தெனவே செப்பு! 89