வெட்ட வெளியில் ஒற்றை மரம்
வெட்ட வெளியில் ஒற்றை மரம்
வெட்ட வெளியில்
ஒற்றை மரம்
கூந்தலை விரித்து
நிற்கும் பெண் போல்
கிளைகளை
விரித்து நிற்கிறது
தனித்து நிற்பதாக
கண்ணில் பட்டாலும்
ஒராயிரம் குடியிருப்புக்களை
உள்ளுக்குள் வைத்திருக்கிறது
பொந்துகளாய்
வாடகையில்லா வீடுகளாய்
இதனுள்
வசித்து கொண்டிருக்கிறது
பறவை கூட்டங்களும்
பல வித உயிரினங்களும்