பொச்சப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல - கார் நாற்பது 7

இன்னிசை வெண்பா

நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை! 7

கார் நாற்பது

பொருளுரை:

தளர்ந்த இயல்பினையுடையாய்! தம்மை விரும்பியடைந்தார்க்கு கொடுத்தலும், அடையாத பகைவரை அழித்தலும் தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து (அவற்றின் பொருட்டு) பொருள் தேடச் சென்ற தலைவரை மறப்பில்லாத புகழையுடைய வேள்வித் தீயைப்போல எம்மருங்கும் மின்னாநிற்கும் மழை வானமானது கொண்டு வரும்!

தளிரியலாய் என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும்.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (23-Aug-25, 9:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே