மெல்லிடை யோஅசையும் மென்பூங் கொடிபோல

சொல்லிடையே பேசும் சுகமான தோர்வீணை
மெல்லிடை யோஅசையும் மென்பூங் கொடிபோல
வெல்லும் விழியிரண்டும் வாளென வீசிடும்
சொல்லில் வடிக்கவோ கல்லில் வடிக்கவோ
மெல்லிடையே நீயே நவில்

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
எதுகை --சொல் மெல் வெல் சொல் மெல் --ஒருவிகற்பத்தில் ஒலிக்க

மோனைகள் சொ சு, மெ மெ, வெ வி வா வீ (முற்று மோனை ),சொ க , மெ ந
விரவி அழகுத் தொடை அமைந்த பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-25, 10:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

சிறந்த கவிதைகள்

மேலே