விளையாட்டு
இரவு நேர விளையாட்டில்
எனக்கு மட்டும் தெரியும்
அவன் ஒளிந்து கொள்ளும்
இடத்தில் ஒளிந்து கொள்ள!
ஐந்து பேர் ஒன்றாய் பதுங்க
ஒன்றன்பின் ஒன்றாய்
முட்டிக்கொள்ள
அவன் என் பின் இருக்கவே விரும்புவேன்
அவனது உரசலில் அழுத்தம் அதிகமாகும் கண்டுபிடித்த மதன் அழைப்பான்
குமார் சுதாகர் அவுட்.