காலத்தை வென்ற கண்ணதாசன்

காலத்தை வென்ற கண்ணதாசன்

சிறுகூடல் பட்டியி லே
சிலிர்தெழுந்த முத்து - கவி
செந்தமிழின் சொத்து - நல்
செட்டியவர் வித்து - அவன்
செம்மைப்பாட லாகுமன்றோ
தேன்வழிப்பூங் கொத்து..!

நறுமணந்தான் வீசும்பாடல்
நாளுந்தானே செய்தான் - அவன்
நல்வாழ்வை நெய்தான் - அதில்
நம் மனதைக் கொய்தான் - இன்னும்
நாயகனாய் வாழ்கிறானே
நம்முடனே மெய்தான்..!

வடித்தப் பாட்டில் துடிப்பிருக்கும்
வறுமைக்காத லுண்டு - பல
வாதைபோக்குங் கொன்று - பெரு
வழியைக்காட்டும் நன்று - கேள்
வலிமுழுதும் போக்கிவிடும்
வைத்தியராய் நின்று..!

படிப்பறிவு குறைவு தானே
பாடினானேப் பாட்டு - அந்தப்
பாடல்களைக் கேட்டு - ஒளிப்
பரவசந்தான் கூட்டு - அவன்
பைந்தமிழில் எடுத்துரைத்த
பண்பைநிலை நாட்டு..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (23-Aug-25, 3:20 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 12

மேலே