குழலூதினான் கண்ணன் குழலூதினான்

குழலூதினான்
கண்ணன் குழலூதினான்
=====================

ஆயர் குலத்தில் உதித்தோர் அவரும்
கோபியர் கன்னியர் மாந்தர்கள் எவரும்
கொள்ளையின்பமே கொண்டுயிர் உருகிட
குழலூதினான்
கண்ணன் குழலூதினான்..!

புல்லினங்களும் ஒன்று கூடிட
ஆவினங்களோ அசைய மறந்திட
ஆறு விரல்கள் ஆட்டம் ஆடிட
அதிசய மெ ல்லாம் காட்டிக் காட்டியே
குழலூதினான்
கண்ணன் குழலூதினான்..!

கார்வண்ணன் நினைவினை நெஞ்சில் தொகுத்து
காலடி கிடப்பார் கர்மம் தொலைத்து
பக்தக் கோடிகள் பரவசமடைய
குழலூதினான்
கண்ணன் குழலூதினான்..!

எந்தன் சிந்தை இருக்கையில்
இருப்பவன்
எத்தர் சூட்சிகள் இடித்துப் பொடிப்பவன்
மனமும் உருகிட விழிகள் செருகிட
குழலூதினான்
கண்ணன் குழலூதினான்..!

அறம் பொருளின்பம் அனைத்தும் குறையா
வரமது தருவான் வாழ்வே உன்னதம்
அவனடி சரணம் அடைந்திட நாளும்ஆனந்தமே
என்றும் ஆனந்தமே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (23-Aug-25, 3:50 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 20

மேலே