C. SHANTHI - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : C. SHANTHI |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 07-Jun-1963 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 11483 |
புள்ளி | : 5398 |
இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....
#அப்பா என்றழைக்கிறது கவிதை..!
கவிதைக்குக் கரு கேட்டேன்
எடுத்துக்கொள் என்றாள்..!
எடுத்தேன்… கொடுத்தாள்
கொடுத்தேன்… எடுத்தாள்..!
கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!..
#சொ. சாந்தி
#குடியிருப்பு
விழிக்குள் தஞ்சமடைய எத்தனிக்கும்
உறக்கத்தை ஏன் விரட்டி அடிக்கிறாய்..!
பிரியமே...
நீ மட்டும்தான் என் விழிகளில்
குடி கொள்ள வேண்டுமா என்ன?
#சொ.சாந்தி
#அநியாயம் அழி
அப்பாவி இனங்களை படுபாவி யொழிப்பரோ
எப்பாவம் மறியாதோர்க்
கிடர்களை யளிப்பரோ..?
இருப்பிடம் இல்லாது
தெருவினில் விரட்டினார்
இருளளித்து வாழ்விலே
இன்னல்கள் கூட்டினார்..!
உடல்காக்கும் உடைகளை
உயிர்க்கதறப் போக்கினார்
இடர்முள்ளில் சுற்றியே
ஏன்பெண்ணை வாட்டினார்..!
ஊர்பார்க்கப் பெண்களின்
உடைகளை உருவினார்
போர்ப்புரிந் தடக்குவார்
ரின்றியே மருகினார்..!
கண்பார்த்து நின்றாரே
கையவர்க் கில்லையா
காமுகரின் எலும்பொடிக்க
கரம்சேர வில்லையா..?
குற்றங்கள் புரிந்தவர்
கோட்டைத்திமிர் கொண்டார்
உற்றத்துணை யாயிருக்கும்
ஊர்த்தலைக் கஞ்சார்..
தோலோடு சுளைவிழுங்கி
ஏப்பம்விடும்
#இன்பமும் நாமும் இனி..!
ஆதாம் ஏவாள் காதல் நமது
ஆரிய திராவிடப் பிரிவுகள் ஏது
நீதான் எனக்கு நானே உனக்கு
நேயம் கொண்ட வாழ்வில் களிப்பு..!
பூதம் போன்றே கிளம்பிய சாதி
பூக்களை அழிக்க வந்தது ஓடி
நாதமிசைத்த வீணையின்
வாழ்வு
நரம்பினை அறுக்க உறவுகள் தீர்வு..!
எனக்கென உன்னை எழுதிய இறைவன்
எதிர்த்துக் காப்பேன்
நானுன் தலைவன்
இனங்கள் பிரிக்கும்
இழிவு சனங்கள்
இவர்கை சிக்கியா
ஆவோம் பிணங்கள்..?
எதிர்க்க வியலா சூழல் என்றால்
இயன்ற வரையில் ஓடு என்றான்
மதியின் அவசியம் மாதவன் உரைத்தான்
மனதில் இருத்தித் துயரம் கடந்தோம்..!
தூரம்.. தூரம்.. தூரம் கடந்தோம்
துயரங்கள் தீண்டா தொலைவில் கிடந
#விலைக்குறைப்பு..
கண்துடைப்பு.!
போராட்டம் விலைகுறைக்க
நடத்தினாலும்
பொல்லாத அரசாங்கக்.. .
குள்ளநரி
நாருரிக்கக் கல்தானே
நாமறிவோம்
நாணயந்தான் காணவில்லை
நரியிடத்தில்..!
பத்து ரூபாய் விலையேற்றி
பதைக்கச்செய்து
பாவிகள் குறைத் திடுவார்
ஒன்றிரண்டு
கத்தித்தான் ஓய்ந்து விட்டோம்
காலங்காலம்
கயவர்கள் மாறவில்லை
கள்ளம்மேலும்..!
மக்களின் உழைப்பினைச்
சுரண்டிநித்தம்
மாபணந்தான் சேர்த்துவிட்டார்
கார்ப்பரேட்டும்
சிக்கலில் உழலும் மக்கள்
விடுபட்டுத்தான்
சிறப்புடனே வாழும்நாள்
வந்திடனும்..!
பாதிவிலை மீதிவரி
பகற் கொள்ளையாய்
பாவிகளின் ஆட்சிதரு
அதிகாரத்தில்
மோதித்தான் பார்த்திடலாம்
#சிந்து வகைப் பாடல்
#(கிளிக்கண்ணி)
கண்ணில் நிறைந்தவளே காட்சியெலாம்
நீயானாய்
மண்ணும் மறையுதடி - கிளியே
மையல் பெருகுதடி..!
காதல் பழுத்திருக்கக் காத்திருக்கேன் தாமதமேன்
நோதல் நொறுக்குதடி - கிளியே
நோய்க்கூடிக் கொல்லுதடி..!
சித்திரம் போலுன்னை சிந்தைதனில் வைத்தேன்
கத்திக் கதறுதடி - ,கிளியே
கண்முன்னே தோன்றிடடி..!
சாதியினால் கொல்லி சதியினால் கொல்லி
பாதிஉயிர் போனதடி - கிளியே
பட்டமரம் ஆவதோடி..!
செங்குருதி விழிதனிலே சேர்ந்திருந்து ஊற்றாகி
பொங்கி வழியுதடி - கிளியே
புத்தி பிசகுதடி..!
மென்தென்றல் நிலைமாறி மேனிதனைத் தீண்டிடுதே
என்னில்தீ பரவுதடி - கிளியே
எரிதழல் ஆவேனோடி..!
#தமிழே தவமெமக்கு….!
இந்தியைத்தான் கந்தலாக்கும்
எங்கள் தமிழ்க்கூட்டம்
மந்தியிங்கு ஆட்டமிட்டால்
நையத்தானே புடைக்கும்..!
வெந்தமொழி வேற்றுமொழி
வேட்டையாடி யழிப்போம்
நிந்தனைகள் செய்யுமென்றால்
நெற்றிப்பொட்டில் அடிப்போம்..!
சந்தனத்தின் வாசமிகு
செந்தமிழைப் படிப்போம்
இந்தித்தலை நீட்டுமென்றால்
எட்டியெட்டி உதைப்போம்..!
செங்கரும்பு சாறிருக்க
சித்தங்குளிரக் குடிப்போம்
சிங்கமொழி எங்கள்தமிழ்
எந்நாளும் கர்ஜிப்போம்..!
வடமொழியும் முடமொழியும்
தொடைநடுங்க வைப்போம்
திடத்தமிழை தேன்தமிழை
திகட்டத்திகட்டப் படைப்போம்..!
இற்றுப்போன இந்தியெதற்கு
இடுகாட்டுப் பிணமே
பற்றுடனே வணங்கிடுவோம்
ப
#அத்தை
தந்தையுடன் பிறந்தவளைத் தாய்தான் என்பேன்
சந்திரனாய் எங்கள்வான் சுந்தர
மென்பேன்
வள்ளியென்பார் பலருக்கும் அவளே
அத்தை
வழங்கிட்டார் கடவுளந்த அன்புச்
சொத்தை.
அல்லும்பகல் உறங்காது காத்து நிற்பாள்
ஆராரோ பாடித்தான் தூங்க வைப்பாள்
தொட்டிலிலே ஆட்டிடுவாள் சுகமாய் அத்தை
கட்டிலென ஆக்கிடுவாள் மடியும் மெத்தை
முனிக்கதைகள் கூறிடுவாள் முகமும் சுருக்கி
மூங்கில் காட்டில் கண்டதுவாய்
பயமும் பெருக்கி
விழிப்பிதுங்கக் கேட்போமே வெடவெ டத்து
கழித்திடுவோம் காலமதைக் கிறுகி றுத்து. !
வக்கணையாய் சமைப்பாளே வாசந் தூக்கும்
வஞ்சிரமும் நண்டுஇறால் வாளை ருசிக்கும்
கைகளுக்குள் பக்குவந்
கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....
"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.
நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை (...)
https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg
பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )
நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..
பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!
நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையு (...)
எண்ணங்கள் மீறிய வண்ணம்
தளம் நாளும் மிளிர்ந்திடும் திண்ணம்
உலா வரும் சோலை இது மணக்கும்
உலகத்தில் உள்ளோரை நாளுமே ஈர்க்கும்
"எழுத்தின்" சேவைகளுக்கு நன்றி
தமிழை அதில் ஊன்றி வளர்போர்க்கும் நன்றி!!!