ஆய்க்குடியின் செல்வன் - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : ஆய்க்குடியின் செல்வன் |
இடம் | : ஆய்க்குடி - தென்காசி |
பிறந்த தேதி | : 29-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jul-2010 |
பார்த்தவர்கள் | : 1153 |
புள்ளி | : 58 |
நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
உங்களில் பலருக்கு தெரியாது நான் கவிதை வெறியன் என்று. மிக சுமாரான கவிதைகளை நான் கிறுக்கினாலும், கவிதைகளை வாசிப்பதை நேசிப்பவன் நான். நான் எனக்கு தெரிந்த மட்டிலும் ஒரு நல்ல ரசிகன்.
என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்...
என் கற்பனையோடு., நான் கற்றதும், பெற்றதும், இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. உனக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா.. தற்கொலை … செய்துகொள்..தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா வாழ்க்கையை வாழ்ந்து பார் ........
"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே
வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில்
ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
Favourite Quotations கஷ்டப்படுறவன்கிட்ட சிரிப்பு இருக்காது.... சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது... கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது........
This is my blog www.ayikudyinselvan.blogspot.com
for more friends plz mail me to mmk_aky@live.com
தவமாய் கிடந்த தாய்
உடன் வருவதில்லை...!
தன்னைத் தந்த தந்தையும்
உடன் வருவதில்லை...!
கனிவாய் கனிந்த காதல்
உடன் வருவதில்லை...!
இனிதாய் இணைந்த இல்லாள்
உடன் வருவதில்லை...!
மனதை மகிழ்வித்த மகனும்
உடன் வருவதில்லை...!
மணமாய் மலர்ந்த மகளும்
உடன் வருவதில்லை...!
போற்றிப் பாடிய பேரர்
உடன் வருவதில்லை...!
நன்மை நல்கும் நண்பன்
உடன் வருவதில்லை...!
கனிவாய் கற்ற கல்வி
உடன் வருவதில்லை...!
பணிவாய் பெற்ற பதவி
உடன் வருவதில்லை...!
படுக்கையில் பரவிய பட்டு
உடன் வருவதில்லை...!
பனிக்காய் போர்த்திய பருத்தி
உடன் வருவதில்லை...!
எனதாய் எண்ணிய எதுவும்
உடன் வரப்போவதில்லை...!
அடுத்த வாரம் மாமன்மகன்
வருவதாக பொய் கூறுவாய்
கடந்த வாரம் அத்தைமகள் வந்தாள்
என்ற உண்மையை வரவழைக்க !
ராட்டினத்தில்
உன்னோடு சுற்றிய பின்புதான்
புவியியல் புரிந்தது
பூமி கோளம் என்று !
திருவிழாபட்டாசு வெடிக்கும் நேரத்தில்
என் பின்னே ஒளிந்து கொள்வாய்
பயல் அல்ல...
பட்டாசு அனைத்தும் உனை கண்டு பின்
பதத்துவிடும் என்பதனால்தான் !
தேர்வடம் பிடித்து இழுக்க
தம்பதியினரை அழைக்கும்போது
முந்தி சென்று வடம் பிடித்தது நாமாகத்தான் இருக்கும்
மஞ்சள்கயிறு கட்டும் முன்னே தம்பதியரானோம் !
வீட்டருகே தேர்வந்தால்
அடுத்து வந்து நின்று கொள்வாய்
முதலில் குடும்பபுகைப்படத்திலும்
அடுத்ததாய் குடும்பத்திலு
உன்
உடல் நோகும் மூன்று தினங்களும்
சிறு பிள்ளையாய்
எனது மார்பினில் முகம் புதைத்து
சுருண்டு கிடக்கிறாய்
அடி வயிற்றினை அழுத்தி நீ பிடிக்கும் போது
கொடியே நீ துவண்டதை கண்டு
சபிக்கிறேன் நானும் பிரம்மனை..
நீ கிடந்து உறங்கடி நான் சமைத்து எடுத்து வருகிறேன்
கண்ணே !
நீயே என் முதல் குழந்தை !
தண்ணீர் ஊற்றா மரமாய்
எனை பாலையில் நட்டு வைத்திருக்கிறாய்
முகிலே !
பெருமழை இல்லையேனும்
ஓரிரு சாரல்
நலமே !