கண்ணே நீயே என் முதல் குழந்தை

உன்
உடல் நோகும் மூன்று தினங்களும்
சிறு பிள்ளையாய்
எனது மார்பினில் முகம் புதைத்து
சுருண்டு கிடக்கிறாய்
அடி வயிற்றினை அழுத்தி நீ பிடிக்கும் போது
கொடியே நீ துவண்டதை கண்டு
சபிக்கிறேன் நானும் பிரம்மனை..
நீ கிடந்து உறங்கடி நான் சமைத்து எடுத்து வருகிறேன்
கண்ணே !
நீயே என் முதல் குழந்தை !

எழுதியவர் : மணிகண்டன் மா (2-Mar-14, 11:27 am)
பார்வை : 212

மேலே