ஆடுகின்றான்
ஆடுகின்றான்
அம்பலத்தான்
என் மனக்கண்ணிலே ..
ஊனம் நிறைந்ததோ
என் மனம் ?
உன்னை அறியாது
அழுவதும் ஏனோ ?
உன்னை அறிந்தால்
என் வாழ்வு
சிறந்திடுமே......
ஏனோ ? ஏனோ?
கண் கொண்டு
பாராதது ஏனோ?
படைத்தவன் நீயானதால்
பாரா முகமானதோ?
தவித்திடும் பிள்ளைக்கு
தயை செய்வாயோ?
மண்ணில் நிறைந்தாய்
விண்ணில் நிறைந்தாய்
என்றனரே உன்னை
என்னில் நிறைய
மனமில்லையோ??