ஆத்ம யோகி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆத்ம யோகி
இடம்:  Madurai
பிறந்த தேதி :  22-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2018
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  7

என் படைப்புகள்
ஆத்ம யோகி செய்திகள்
ஆத்ம யோகி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2025 5:19 pm

மனிதன் தனக்கான பாதை என்று எதை நம்புகிறானோ அதுவே அவனை சிறைபிடிக்கிறது .சுற்றி திரிய வேண்டிய பறவையை கூண்டில் அடைத்தால் என்னவாகும். நல்ல அறிவுடைய மக்கள் நிறைய பேர் துயரத்தில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் அவர்கள் நிதி நிலைமை பற்றிய கவலை. பணமும் , அறிவும் ஒன்று சேர என்றுமே இருந்ததில்லை . இது தான் நியதிகள் போல . எனக்கு தெரிந்தவரையில் யாரேனும் துயரத்தில் இருக்கும் போது மற்றவர் வந்து சொல்லுவார். கவசம் பாடுங்கள் , நாமம் போற்றுங்கள் என்று. ஆனாலும் அங்கு நடப்பவைகளை தடுக்க முடிவதில்லை. கடவுளின் மீது நாம் வைக்கும் சிறு நம்பிக்கை விதியின் பெரும் தாக்குதலில் இருந்து நம்மை மீட்டெடுக்கிறது. ஆனால

மேலும்

ஆத்ம யோகி - எண்ணம் (public)
01-Sep-2025 8:19 am

இயக்குபவரின் வழிகாட்டுதல் படி 

இயங்குகிறது ரயில் பெட்டிகள் 

மேலும்

ஆத்ம யோகி - எண்ணம் (public)
25-Aug-2025 12:58 pm

எல்லா நகைச்சுவையும் 

நடக்கும் இடம் 
பேருந்து பயணம் 

மூன்று பேர் 
அமர வேண்டிய இருக்கை 
அவரது துணிப்பையும் 
இடம் பிடித்துக்கொள்கிறது 

ஆ என்கிற சங்கீத சத்தம் 
பாடியவர் யாரப்பா ?? 
யாரோ கால மிதிச்சுட்டாங்க
கண்ணீர் ததும்பும் குரலில் 
அவரின் பேருந்து பயணம் 

தற்காத்துக்கொள்ள உயர்த்திய கைகள் 
அருகில் இருப்பவரின் 
மூக்கை தட்ட 
தட்டியவர் யாரென்று ? 
எட்டிப்பார்க்கிறது 
சிறு துளி ரத்தம் 

காற்றாற்று வெள்ளம் 
ஊரை சூழ்தாற்போல 
தூக்கம் நிரம்பி 
வழிகிறது ஒருவருக்கு 
பேருந்து பயணம் 

முந்நூறு ரூபா 
சேலை - என்ற 
முணுமுணுப்புக்கிடையில்.....

கொஞ்சம் தள்ளி நில்லுமா 
பெண்களுக்குள் சலசலப்பு 
அதுவும் பேருந்து பயணம் 

கொஞ்சல் சிரிப்பைத் தரும் 
சில்லறைகளுக்கு தட்டுப்பாடு 
நடத்துநர் சலித்துக்கொள்கிறார் 
பேருந்து பயணத்தில் 

முன்பக்கம் ஏறும் 
ஆண்மகன்களுக்கு 
அவ்வப்போது வார்த்தையில் 
சவுக்கடி கொடுத்துவிடுகிறார் .....

அங்கே மெல்லிய குரல் 
இளவட்டம்னா அப்படித்தான் பா 

மண்டையில் ஏற 
மறுக்கும் கணித பாடம் 
போல படியில் 
பயணிக்கும் இளசுகளும் 

நடத்துநர் நிலைமை 
பாவம் என்கிறது 
அப்போது தொடங்கப்பட்ட 
நீதிமன்றம் 
பேருந்து பயணம் 

இவங்க இப்படித்தான் பா 
என்கிறது மீசை 
நரைத்த இளைஞர்கள் 

இருக்கை ஐம்பத்து மூன்று
கூட்டல் இரண்டு 
ஆனால் அதிலும் 
சந்தேகம் சிலருக்கு 

அப்படியே கொஞ்சம் 
அறிவுரை வழங்கும் 
ஞானிகள் - வியக்கிறது 
இத்தனை உலகமா என்று 

பேருந்து பயணத்தில் 
நான் இறங்க வேண்டிய 
இடம் இது தான் 

அத்தனையும் பேருந்து பயணம் 
அடுத்தும் நாம் சந்திப்போம் 

மேலும்

ஆத்ம யோகி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2025 3:14 pm

சுதந்திரம்
காற்றடித்தால் தூசி பறக்கும்
ஆனால் இங்கு
உயிர் நீத்தோரின்
மூச்சுக்காற்றே நிறைந்திருக்கும்

காந்தியின் அகிம்சையை
கண்டிருக்கிறீரா ? - இல்லையேல்
எங்கள் பாரதியின் வரிகள்
உனக்கு பதில் சொல்லியிருக்கும்

நீ அணைத்த மூச்சுக்காற்று
அத்தனையும் இன்று
வெடித்து சிதறுது பார்த்தாயா ?

மூவர்ணக்கொடி
காற்றில் அசையும்
அழகைப் பார் - அது
காற்றென்று நினைத்தாயோ ?
எங்கள் முன்னோரின் மூச்சு

மண்ணில் பட்டால் மாசாகும் - என்று
நெஞ்சில் சுமந்து
நீத்தோமே எங்கள் உயிரை
அந்த குமரனை விடவா ?

ஆயுதமே தேவையில்லை
எங்கள் எழுத்துக்களே போதும்
இனிய சுதந்திரத்துக்கு …….

வீரி

மேலும்

ஆத்ம யோகி - ஆத்ம யோகி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2024 9:45 am

ஒற்றுமை இல்லாத குப்பைகளை 


ஒற்றுமையாக்கியவர் துப்புரவு பணியாளர் 

மேலும்

ஆத்ம யோகி - ஆத்ம யோகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2018 9:20 pm

அன்பு அகத்தில் இல்லை
முதியோர் வீட்டில் இல்லை
அன்பு அகத்தில் வைத்தோரை
அன்பகத்ததில் விட்டோம் நாம்!

மேலும்

ஆத்ம யோகி - ஆத்ம யோகி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 10:51 am

        கண்கள்

எண்ணங்களை சமர்பிக்கிறேன்
பிடித்திருந்தால் பகிரு
சொல்லியது உன் கண்கள் 

மேலும்

ஆத்ம யோகி - ஆத்ம யோகி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 10:47 am

வாழ்க்கை 

     போதை தரும் பாதை 
     சரியானது அல்ல 
     ஆனால் இது தான் 
     இன்றைய சமுதாயத்தின்
      தலைவன் 

மேலும்

ஆத்ம யோகி - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2018 4:06 pm

சமுதாயதை முன்னேற்றுதல் பெண்மணிகள் மட்டுமா?

மேலும்

இருவருமேதான் 18-Apr-2018 7:04 pm
விஞ்ஞானிகள் 29-Mar-2018 7:16 pm
சட்டம், பள்ளிகள், ஆலயங்கள், பெற்றோர்கள், விழுஞானிகள், தலைவர்கள்...... 29-Mar-2018 7:15 pm
இரண்டு கை தட்டினால் தானே ஓசை வரும் 26-Mar-2018 4:02 am
மேலும்...
கருத்துகள்

மேலே