சிவநாதன் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  சிவநாதன்
இடம்:  யாழ்ப்பாணம் இலங்கை
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Sep-2012
பார்த்தவர்கள்:  1773
புள்ளி:  1517

என் படைப்புகள்
சிவநாதன் செய்திகள்
சிவநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2018 10:14 pm

உலகம் முழுவதிலும் உள்ள சமுதாயங்களில் தங்களுக்கு மறுக்கப்பட்ட செயல்களைச் செய்வதற்கு பல நூற்றாண்டுகளாக பெண்கள், ஆண்களின் பெயர்களையும் அவர்களின் உடைகளையும் பயன்படுத்த வேண்டியதாய் இருந்தது என்பதை இன்னும் ஒரு புரியாத புதராக நாம் கருத வேண்டியதில்லை. அவ்வாறு செய்வதொன்றுதான், சமூகத்திலுள்ள பல துறைகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழிமுறையாகவும் அமைந்திருந்தது. இது இலக்கியத்திற்கும் பொருந்தும். அத்தகைய துணிவுடன் செயல்பட்டதால்தான் அவர்கள் உண்மையிலேயே நமது சமுதாயத்தை மாற்றியுள்ளனர். இது போன்ற நடத்தைக்காக அவர்களுக்கு பலமுறை மரணங்களே பரிசாக தரப்பட்டன. எனவேதான் இன்று பெண்களின் வரவானது வாழ்க்கை

மேலும்

அர்ச்சனா நித்தியானந்தம் அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-May-2018 8:19 pm

“ஹலோ!”

“ஹ...லோ…”

“அனு, என்ன ஆச்சு? இருக்கியா?”

“டேய் அரவிந்த், நீயா? என்ன நடு ராத்திரி போன் பண்ணியிருக்க?” என்றாள் அனு, மிகவும் தூக்கக் கலக்கத்தோடு.

“என்னது நடு ராத்திரியா? மணி பத்து தான் ஆகுது” என்றான் அரவிந்த், சற்று கோபமாக.

“டேய் எனக்கு அது நடு ராத்திரி தான். காலைல பேசிக்கலாம். குட் நைட்.”

“ஹே இரு! இங்க ஒருத்தன் வாழ்வா, சாவா பிரச்சனைல இருக்கான். நீ கவலை இல்லாம தூங்கறியா?”

“என்னடா உன் பிரச்சனை?” என்றாள் அனு சலிப்புடன்.

“ஹே நான் இன்னும் கொஞ்ச நாள்ல லண்டன் போறேன், M.B.A. படிக்க. அப்பா எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டாங்க” என்றான் பரிதாபமாக.

“அடப் பாவமே! நீ உள்ளூர்ல அரியர

மேலும்

மிக்க நன்றி :) :) 06-Jun-2018 11:07 pm
அருமையான காதல் கதை; எனக்கு மட்டும் அரவிந்த் என்ற இடத்தில் அருண் (என் பெயர்) என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது...... வாழ்த்துக்கள் 06-Jun-2018 3:27 pm
மிக்க நன்றி :) 14-May-2018 9:48 pm
அருமையான க(வி)தை... 12-May-2018 8:07 pm
அர்ச்சனா நித்தியானந்தம் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Apr-2018 5:01 pm

இங்கே ஒரு மனிதன் மரணித்து,
ஒரு மணிநேரம் சென்றுவிட்டது!
என்ன செய்கின்றனர்
என் அருமை குடும்பத்தினர்?
எங்கே போனாள்
என் தர்மபத்தினி லட்சுமி?!
எங்கே போனான்
என் தவப்புதல்வன் குமரன்?!

இதோ வந்துவிட்டாளே,
என் அருமை காமாட்சி!
அய்யோ! இல்லை இல்லை!
என் அருமை லட்சுமி!
நல்லவேளை,
அவளுக்குக் கேட்கவில்லை!!!

என்னை இந்த உலுக்கு
உலுக்குகிறாள்!?
பேயறைந்தவள் போல்
நிற்கிறாள்
நான் ஒன்றுமே இவளைச்
செய்யவில்லையே!
செத்த பின்னும் அந்த வீரம்
எனக்கில்லையே!!

என் செல்லமகன்,
கணினி குமாரும் வந்துவிட்டான்
தனக்குத் தெரிந்த
மருத்துவப் பரிசோதனை முடித்துவிட்டான்
ஏதோ யோசித்தபடி,
வேகமாய் வெளியே சென்றவன்

மேலும்

மிக்க நன்றி ☺ 11-May-2018 8:04 am
மிகவும் ரசித்துப் படித்தேன்..அருமையான கற்பனை.வாழ்த்துக்கள். 11-May-2018 7:30 am
உங்கள் கருத்துக்கும், சித்திரை திருநாள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! 14-Apr-2018 2:07 pm
:) :) மிக்க நன்றி!! 14-Apr-2018 2:06 pm
சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) vellurraja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Apr-2018 12:16 am

எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மேலும்

ஆர்வம் 31-May-2018 5:12 pm
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் . 28-May-2018 8:02 pm
உங்கள் சிறந்த எண்ணம் ஈடேர வாழ்த்துக்கள்.... 26-May-2018 7:45 pm
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
சிவநாதன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 1:35 am

திருப்பூர்.., ஈரோடு.. கோவை மாநகரங்களில் #வாசகசாலை வழங்கும் “ இலக்கிய சந்திப்பு” நிகழ்வுகளின் விபரங்கள்.

அனைவரும் வருக...!

மேலும்

சிவநாதன் - KADAYANALLURAN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 8:27 pm

 

தத்தாத்ரேயர் ஜெயந்தி தினம் இன்று 


     ஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள். 

      கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கின்றன ஞானநூல்கள். 

      படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

       கற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.  எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்“, என்றனர். அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.  கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை சத்தியம் எனில், , இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.   

     தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.  உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். 

     இவரது பிறிதொரு பெயர் ஆத்ரேயர், (அதாவது அத்த்ரியின் புதல்வர்). ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்!

      தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலேயே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவரது கோயில் அமைந்துள்ளது. கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை, வேளச்சேரியில் தத்தாத்ரேயர் கோவில் அமைந்துள்ளது. தத்தாத்ரேயர் பிரதானமாக விளங்குவது இவ்வாலயத்தில் மட்டுமே. பக்தர்கள் கேட்டதைக் கொடுக்கும் ஜகன்மாதா மஹாலஷ்மி அனகாதேவியாக அவருடன் உறைகிறார். மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளன்று பிரதான அனகாஷ்மமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அஷ்டமா சித்திகளையும் பிள்ளைகளாகப் பெற்ற அனகா தத்தரை வழிபடுவதே அனகாஷ்டமி விரதமாகும். சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக்கூடியது இந்த விரதம் பிரதி மாதம் ஆசிரம ஆலயத்தில் நடத்தப்படுகிறது. ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர்  பக்தர்கள் . இவரை  முறையாக  உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும் மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை. தத்தாத்ரேயர் ஜெயந்தியான இன்று  தத்தாத்ரேயரை வழிபட்டு நலன்கள் பல பெறுவோம்.    

 ==கடையநல்லூரான்      

மேலும்

தத்தாத்ரேயரின் கதை சொல்லும் சிறப்பான பதிவு . குருவின் திருவடி சரணம் . வாழ்த்துக்கள். 11-May-2018 8:24 am
சிவநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2018 12:32 am

கௌதமைக்குத் தன் குழந்தைமேல் அளவு கடந்த அன்பு உண்டு. இரண்டு வயதுள்ள அக்குழந்தையின் சிரிப்பும் களிப்பும் அவளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின. அதன் ஓட்டமும் ஆட்டமும் அவளுக்குப் பெருங்களிப்பை யுண்டாக்கின. அதனுடைய மழலைப் பேச்சு அவள் காதுகளுக்கு இனிய விருந்து. களங்கமற்ற அக்குழந்தை யின் இனிய முகம் அவள் கண்களுக்கு ஆனந்தக் காட்சி. அந்தக் குழந்தைதான் அவளுக்கு நிறைந்த செல்வம். அதற்குப் பால் ஊட்டு வதில் பேரானந்தம். அக்குழந்தையை அவள் கண்மணிபோல் கருதிச் சீராட்டிப் பாராட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்த்து வந்தாள்.

மற்றக் குழந்தைகளுடன் தன் குழந்தையையும் விளையாட விட்டு மகிழ்வாள். நாய், பூனை, காக்கை, க

மேலும்

சிவநாதன் - அர்ச்சனா நித்தியானந்தம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2018 5:27 am

நடுசாமம், ரெண்டு மணி இருக்கும். தூக்கம் கலஞ்சு போனது. எப்படி புரண்டு படுத்தும், தூக்கம் வரல. எழுந்து போய், தண்ணி குடிச்சுட்டு, என் மடிக்கணினியோட உட்கார்ந்தேன். பணி சம்மந்தமான வேலை எதுவும் செய்ய தோணல. அப்போ ‘பேஸ்புக்’ ஞாபகத்துக்கு வந்தது. எப்போவாவது தான் ‘பேஸ்புக்’ பார்க்குறதுண்டு. அப்போ பார்க்கணும்னு தோணுச்சு. என்னென்னமோ பதிவுகள் வந்து விழுந்தது. ஏதோ சும்மா பார்த்துட்டே வந்தேன், எதுவுமே ஒரு ஆர்வமா இல்ல. மேல, ‘நோடிபிகேஷன்ஸ்’, ‘பிரெண்ட் ரெகுவெஸ்ட்’ என்ன வந்திருக்குன்னு பார்க்க, க்ளிக் பண்ணா, ஒரு பெரிய அதிர்ச்சி. அவ எனக்கு பிரெண்ட் ரெகுவெஸ்ட் அனுப்பி இருந்தா. அய்யோ! எப்ப அனுப்பினா’னு தெரியல. ‘அக்

மேலும்

மிக்க நன்றி :) தொடர்கதைகளும் எழுதியுள்ளேன்... விரைவில் பதிவிடுகிறேன் :) 06-Jun-2018 11:08 pm
நல்ல கதை; கலக்கல்...... அருமை..... காதல் கதை எழுத உங்களுக்கு மிகவும் நன்றாக வருகிறதே.... தங்கள் ஏன் ஒரு தொடர் கதை எழுத கூடாது. 06-Jun-2018 3:47 pm
உங்களின் கருத்தை வரவேற்கிறேன்! நன்றி!! 11-May-2018 8:02 am
தங்கள் எழுத்து நடை அருமை ஆனால் ....//யாருடி இவன், கருப்பட்டிக்குக் கலர் சட்ட போட்ட மாதிரி// இப்படி ஒருவர் நிறத்தை விமர்சிப்பது ஒட்டுமொத்த தமிழ் திராவிடத்தின் நிறத்தை விமர்சிப்பதற்குச் சமம். மதம் சாதி நிறம் மொழி பேதமற்ற எழுத்துக்கள் எப்போதும் எல்லோராலும் வரவேற்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்க 11-May-2018 12:11 am
சிவநாதன் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 9:37 pm

  இரண்டு முறை நீதிமன்றம் எச்சரித்தும் இன்னும் இந்த காவல்துறை S V சேகரை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை பின்ணணி காரணம் என்ன ???????  

மேலும்

தங்கள் ஆதங்கம் நியாயமானது ..விவாதிக்கப்பட வேண்டிய விடயம்!! கேள்வி பதில் பகுதியில் பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 11-May-2018 12:01 am
சிவநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 9:12 pm

சீதா ராமன்
தேற முடியவில்லை தமிழில்
ஐம்பது புள்ளி விழுக்காடு
இராமாயணத்தில் மட்டும்

மேலும்

சிவநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 7:09 pm

காலையில் எழுந்து
நீ என்னைக் கழுவி
ஊற்றத் தொடங்கும் போதே
களை கட்டுகிறது
கல்யாணி

பர பரத்து
சமையல் கட்டில்
நீ போட்டுடைக்கும்
பாத்திரங்கள் எழுப்பும்
ஓசைகளின் பண்
நட்ட பாடை

குளித்து முடிக்கு முன்னே
சப்பாத்தியா உப்புமாவா
என்ற உன் விவாதத்தில்
கிளம்புகிறது வயிற்றில் புகை
பந்துர வாளியாய்

போகட்டும் புறப்படுவோம் என்று
வண்டியை எடுத்து வாசல்
வரை சென்ற என்னை
வழிமறிக்க வைக்குதடி
உன் மோகனப் புன்னகை

வீடு வரும் போது
மல்லிகை அல்வா
சாத்துக் குடி தேன் முறுக்கு
என தாளம் தப்பாமல்
பட்டியல் இடும் போது
சமைந்து போகிறது மனது
சங்கராபரணமாய்

எல்லாம் முடித்த

மேலும்

சிவநாதன் - சிவநாதன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2018 7:50 pm

ஆண்டாள் சர்ச்சை குறித்து கோவை ஞானி, முதுபெரும் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் ஜெயபாஸ்கரன், சென்னிமலை தண்டபாணி போன்ற பெருமக்களின் கருத்துகள் அடங்கிய என் கட்டுரை, இன்றைய நக்கீரனில்.... வாய்ப்புள்ளோர் வாசிக்கலாம்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (158)

user photo

இரா இராஜசேகர்

வீரசிகாமணி , சங்கரன்கோவில
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
user photo

சுவாஸ்

nagercoil
அருண்

அருண்

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (158)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (159)

தாரகை

தாரகை

தமிழ் நாடு
user photo

nuskymim

kattankudy

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே