எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆண்டாள் சர்ச்சை குறித்து கோவை ஞானி, முதுபெரும் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் ஜெயபாஸ்கரன், சென்னிமலை தண்டபாணி போன்ற பெருமக்களின் கருத்துகள் அடங்கிய என் கட்டுரை, இன்றைய நக்கீரனில்.... வாய்ப்புள்ளோர் வாசிக்கலாம்.

மேலும்

எழுத்துத் தளத் தோழமைகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

மேலும்

பட்டுத் தெறித்தது ஒளி 

விம்பமா ...பிரதி விம்பமா ..
குழப்பத்தில் கண்ணாடி!

மேலும்

நம்பிக் கையில் சொடுக்கும் கவிதைகள் 


நம்பிக்கையுடன் கொடுக்கும்  கவிதைகளை 

வெற்றி கொள்வதால் 

சூனியமாய்த்  தெரியும் தமிழ் ...

மேலும்

"சாதி ஒழி மதம் அழி சாதி ","கற்றவை பற்றவை" இந்த இரண்டு  கவிதைக்கான தலைப்புக்களும் கடந்த காலங்களில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கான தலைப்புக்களில் குறிப்பிடத் தக்க சிறந்த தலைப்புக்கள் ...படைப்பாளியைச் சிந்திக்க வைக்கும் பாங்குடன் அமையும் இவ் வகைத் தன்மையுடைய   தலைப்புகளின் தேர்வுகள் பாராட்டப்பட  வேண்டியன..

மேலும்

பயணம் …பயணம்....பயணம்
பத்து மாத சித்திரமொன்று ஜனனம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
பயணம்...பயணம்....பயணம்
https://www.youtube.com/watch?v=0MC9AJW6g1k

மேலும்

பயணங்கள் முடிவதில்லை, தொடரும் (உடலன்றி).... 27-Jul-2015 2:58 pm
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் 14-Jul-2015 9:35 pm

இன்று ஏ .எம் .ராஜா பிறந்தநாள்
-----------------------------------------------------------
“தேன்நிலவு” படத்தில் “காலையும் நீயே மாலையும் நீயே” பாடலை இப்போது கேட்டாலும் நாற்பது வயசு குறைந்து விடுகிறது. என்னைச் சுற்றி காதல் ததும்பி வழிகிறது .என் உடம்புக்குள் ஜெமினி புகுந்து கொள்கிறார் .எம் வீட்டு பூச்செடிகளிலெல்லாம் வைஜைந்திமாலா ஆடிக் கொண்டிருக்கிறார் ......ஒரு ஜிப்பா ,பைஜாமாவை போட்டுக் கொண்டு கைகளை விரித்துக் கொண்டு “காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்” என்று பாடிக்கொண்டு வசந்தியை இழந்த சோகத்தில் ஓடுகிறேன்.”கண்களின் வார்த்தைகள் புரியாதோ ...காத்திருப்பேன் என்று தெரியாதோ “என்று பவானி சாகர் ,வைகை (...)

மேலும்

என்றும் நெஞ்சில் வாழும் ஏ எம் ராஜா ! மென்மையான வெல்வெட் குரல். இசை அமைப்பாளராகவும் இருந்து கதா நாயனுக்கு காதல் டூயட் பாடிய பாடகரும் இவர் ஒருவர்தான் இனிய காலையிலும் அழகிய மாலையிலும் ரசிக்கத் தக்க பல இனிமையான பாடல்களைத் தந்திருக்கிறார். நற் பதிவு வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 01-Jul-2015 10:18 pm

சிலேடை (படித்ததில் பிடித்தது )

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே.....

சமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. எனவே சீரகத்தை (...)

மேலும்

நன்றி..நன்றி ... 20-Jun-2015 12:56 am
அருமை அருமை அருமை ! அற்புதம் அற்புதம் அற்புதம் ...... சொல்ல வார்த்தைகள் இல்லை.......... அமுதம் போன்ற ஒரு சிலேடைப் பாடலைச் சுவைக்கத் தந்தமைக்கு மிக்க அன்றி சிவா சார் ....... தொடரட்டும் தங்கள் பணி 19-Jun-2015 11:53 pm


சிறகடித்துச் சென்ற எண்ணப் பறவைகள் உதிர்த்த பலவற்றுள் சேர்த்துப் பத்திரப் படுத்திய சிறகுளில் ஒன்று...

"தனி மனித அடையாளம் வீரியமுள்ள தலைமையின் கருவறை _அப்படிப்பட்ட கருவறையில் மலடுகள் உற்பத்தியாவதில்லை !!! தவறான தனிமனித அடையாளம் வண்ணமயமாக இருந்தாலும் நெடு வாழ்னாள் அற்றவை _அப்படிப்பட்ட அடையாளங்கள் கால புயலில் காணாமற் போகும்!! - அகன்

மேலும்

நம்-நலம் 10-May-2015 6:33 am
நலம் ஐயா.. தாங்கள் நலமா.. உடல் நம் தேறியபின் ஒலி வடிவில் பதியுங்கள் கேட்க ஆவலாக உள்ளோம் ... 10-May-2015 6:33 am
நன்றி சிவா நலமா இதை இன்னும் விரிவாக விரைவில் ஒலி வ்ச்டிவில் தளத்தில் கேத்கலாம் 09-May-2015 7:48 pm


மழைஎன்பது யாதென ...

நீண்டு படுத்திருந்த
நெடு நிழல்கள்
நிலத்தை விட்டு
வேண்டா வெறுப்பாக
விலகிக் கொள்ள
நிலையற்று உலையும்
நிறம் மாறும் மேகங்கள்
நீல வான்பரப்பில்
ஒன்று கூடி
உள்வாங்கிக் கொள்கிறது
ஒன்றுமாறியாச் சூரியனை ..

மழை எனும் பெண்ணின்
என்றும் உலராத
உதடு உதிர்த்த
ஈரத் தாலாட்டில்
மெல்ல மெல்ல
நனைந்து தூங்குகிறது
நாளெல்லாம்
காய்ந்து கிடந்த பூமி ..

ஈரம் சொட்டும்
மரங்களை இடைவிடாது
தலைதுவட்டும் காற்று
இனி போதும் என்று
கூறிக்கொள்ள
கை கொட்டிச் சிரித்துக்
கொண்டே இருக்கிறது
வானம் .

வழியும் மழைத் துளியின்
ஈர நினைவுகளில் தன்
இருப்பினைத் தொ (...)

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 22-Apr-2015 6:18 pm
மிக்க நன்றி தேவ் .. 22-Apr-2015 6:17 pm
அருமை தோழரே.......... 22-Apr-2015 8:25 am
ஆஹா ....மிக அருமை ......! உயரிய தரம் .! மிகப் பிடித்து விட்டது தங்களின் இந்தப் படைப்பு சிவா சார் ......! 22-Apr-2015 4:09 am
மேலும்...

மேலே