SORNAVELU S - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : SORNAVELU S |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : 22-Aug-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 588 |
புள்ளி | : 87 |
ச. சொர்ணவேலு ஆகிய நான் கடந்த முப்பத்து ஆறு ஆண்டுகளாக கணக்காளர் மற்றும் தணிக்கையாளராக சுய தொழில் செய்து வருகிறேன். வந்த சோதனை, வேதனை இவைகளை வைத்து சாதனைகளாக மாற்றிக்கொண்டேன். 'எல்லோரும் இன்புற்றிப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' என்ற தாயுமானவரின் சிந்தனையில் உடன்பாடு கொண்டவன்.
விண்ணின் நிலவரம் கலவரமானால்,
மண்ணின் நிலைதான் என்னாகும்?.
மண்ணின் நிலவரம் கலவரமானால்,
உயிர்கள் நிலைதான் என்னாகும்?.
உயிர்கள் நிலவரம் கலவரமானால்,
நிம்மதியின் நிலைதான் என்னாகும்?.
நிம்மதியான வாழ்வு வேண்டும்-அதற்கு,
கருணையுள்ள மனம் வேண்டும்.
௨௦௨௪ தீப ஒளியில் கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்த்துக்களுடன்
ஆணைக்குளம், சங். சொர்ணவேலு,
கணக்காளர், கோவை.
n
அழகான வாழ்வென இறைவன் தர-நாம்,
அதுவான நேரமிது என ஏற்று வாங்க:
புதிரான பொருளெல்லாம் உள்ளே இருக்க-நம்
உதிரமெல்லாம் கொதித்தெழுந்து சிக்கலாகி:
இத்தனை சிக்கலை எப்படித் தீர்ப்பதென-நாம்
அத்தனை சக்தியையும் வரவழைத்துப் போராடி:
மனதினைப் பக்குவப் படுத்தி வெற்றி பெற-நாம்
தினமதை உரமென வைத்துக் கொள்வோம்.
"சோபகிருது"வில் சோகம் போக-நாம்
சுபமாக ஒன்று சொல்வோம் தீர்க்கமாக!
:குரோதி"யில் நமக்கு "விரோதி" இல்.
இனி அவ்வளவுதான் என்பது வேண்டாம், இனிமேல்தான் எல்லாம் என்பது வேண்டும்; பனிபடர்ந்த காலம் சூரியனால் விலகும், பிணி முழுதும் விலகி நிலவென ஒளிரும்:
இனி அவ்வளவுதான் என்பது வேண்டாம், இனிமேல்தான் எல்லாம் என்பது வேண்டும்; பனிபடர்ந்த காலம் சூரியனால் விலகும், பிணி முழுதும் விலகி நிலவென ஒளிரும்:
பறவைகளின் சத்தம் விடியலை உணர்த்தும், தவளைகளின் சத்தம் நீர் நிலையை உணர்த்தும்;
கடலலைகளின் சத்தம் மழைநிலையை உணர்த்தும்;
மனிதனின் சத்தம் மனநிலையை உணர்த்தும்.
௨௦௨௪ புத்தாண்டு நாள் நிலைக்கு உயர்த்த வாழ்த்துக்கள்.
நிலத்தில் விளைந்தவை அனைத்தும்
விதைத்தவை அல்ல,
களத்தில் கிடைத்தவை அனைத்தும்
திட்டமிட்டவை அல்ல.
நடந்தவைகளுக்கு காரணங்கள் உண்டு
எதிர்பார்த்தவை அல்ல,
கடந்தபின் அசைபோடுதல் உண்டு
நிலைத்து நிற்பவை அல்ல.
இன்றுதான் பிறந்தோம் என்றெண்ணி
நடக்க முற்படுவோம்,
வென்றுதான் திரும்பிடுவோம் என்றெண்ணி
பெருமிதம் கொள்வோம்.
சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என, ஆனைக்குளம் சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.
தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?
திரும்பிய போது தான், கடந்த பாதை
கல்லு முள்ளுன்னு தெரிஞ்சுச்சு; விரும்பி வாழ்ந்த வாழ்க்கை தான்,
நல்ல முறையில போயிருச்சு.
நடந்த தெல்லாம் நல்லது தான்னு,
நாலு தெசயிலும் சொல்லு றாங்க; படர்ந்த தெல்லாம் ஊழ் வினைன்னு,
பட்டறிவா விளக்கு றாங்க.
காலம் தந்த பாட ம
வாழும் நிலையில் குழப்பம்,
வசமற்று இருப்பது பழக்கம்,
வீழும் நிலையிலும் தயக்கம்,
தெளியுமா இந்த மயக்கம்,
முடங்கியிருந்த மூளைதனை
அறிவுகொண்டு எழுப்பிவிடு,
அடங்கியிருந்த இதயம்தனை
ஆற்றல் கொண்டு இயங்கவிடு,
உதவிக்கு இறைவனைத் தேடிடுவீர்,
கண்களிலே சாத்தியமா படமாட்டான்,
கதவுக்கு அருகினிலே இருந்திடுவான்,
ஆனாலும் உன் கையைவிடமாட்டான்,
"மனிதம்" கொண்ட மனிதனை அனுப்பிடுவான்,
அவனும் உரிய நேரத்திலே வந்திடுவான்,
கணிதம் தப்பாது நிலைமைதனை சரிசெய்வான்,
மலர்ந்த முகத்துடன் உனைவெளிக் கொணர்வான்.
௨௦௨௦ ன் தீப ஒளியில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும்,
உ
பொதுவாக மனிதனின் தோல்விக்கான காரணம் என்ன ?
என்னுள் சில கேள்விகள் ......
௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?
பெண் புத்தி பின் புத்தி என்று கேள்வி பட்டிருப்போம். அதன் உண்மையான பின்னணி என்ன?