H ஹாஜா மொஹினுதீன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : H ஹாஜா மொஹினுதீன் |
இடம் | : இரவாஞ்சேரி |
பிறந்த தேதி | : 02-Apr-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 4421 |
புள்ளி | : 247 |
வட்டி போட்ட குட்டி கூட வான நோக்கி வளருது !
வாடி போன மூஞ்சி எல்லாம் வாட்டர் தேடி ஓடுது.....!
வளமான வாழ்க்கையின்னு வாய் கிழிய பேசுது.... !
வரும் தேர்தலையும் மனசில் வச்சி வாங்கி வாங்கி ஊத்துது ...!
செத்தவனும் எழுந்து வந்து ஒட்டு போட்டு போகிறான் !
சேர்த்தவனோ காச எறைச்சி செங்கோட்டையையே புடிக்கறான் ...!
சேர்ந்த கூட்டம் அத்தனையும் செருப்பு மணலாய் உதறுறான் !
சோத்துக்கும் வழியின்றி சொரணைக்கெட்டு நிக்கறான்.....
நல்லவன்னு நடிக்கறான் ! நரிவேஷம் போடறான் !
நன்மை செய்ய போரேன்னு ; நடு வீதியில் கூவுறான் !
போதை தெளிஞ்சி பாரு ! அங்கே கூவுவது யாரு !
வட்டி வாசல் அடைப்பதற்கு வழிஇருக்கா பாரு !
வரக்கூடிய நாள் வறுமையை குறைக்கக்கூடிய நாளும் அல்ல, வசந்தத்தை கூட்டக்கூடிய நாளும் அல்ல வியாபார உக்திக்கு உங்கள் வக்கிர புத்தியை வருடிவிடும் ஒரு தினம் தான் இந்த காதலர் தினம்.கவனம் சிதறினால் நீ காணாமல் போய்விடுவாய்.பூப்பெய்த்த உன்னை கண்டு பூரிப்படையும் உன் தாய் தந்தையரை விடவா ஒரு கொத்து பூ கொடுப்பவன் உயர்ந்தவன் ஆகின்றான்? . கவனமாய் இரு சகோதரி.எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் எதுவும் செய்ததாக சரித்திரம் இல்லை.ஏமாளிப்பெண்ணே
என்ன சொன்னாலும் காதில் விழவில்லைதானே. ஆதங்கம் !
மனைவியை காதலித்தாலும் சரி மற்றவர் மகளை காதலித்தாலும் சரி, யாரோ ஒருவன் சொல்லும் அந்த ஒரு நாள் மட்டும்தான் காதலிக்கவேண்டுமா? அப்
வரக்கூடிய நாள் வறுமையை குறைக்கக்கூடிய நாளும் அல்ல, வசந்தத்தை கூட்டக்கூடிய நாளும் அல்ல வியாபார உக்திக்கு உங்கள் வக்கிர புத்தியை வருடிவிடும் ஒரு தினம் தான் இந்த காதலர் தினம்.கவனம் சிதறினால் நீ காணாமல் போய்விடுவாய்.பூப்பெய்த்த உன்னை கண்டு பூரிப்படையும் உன் தாய் தந்தையரை விடவா ஒரு கொத்து பூ கொடுப்பவன் உயர்ந்தவன் ஆகின்றான்? . கவனமாய் இரு சகோதரி.எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் எதுவும் செய்ததாக சரித்திரம் இல்லை.ஏமாளிப்பெண்ணே
என்ன சொன்னாலும் காதில் விழவில்லைதானே. ஆதங்கம் !
மனைவியை காதலித்தாலும் சரி மற்றவர் மகளை காதலித்தாலும் சரி, யாரோ ஒருவன் சொல்லும் அந்த ஒரு நாள் மட்டும்தான் காதலிக்கவேண்டுமா? அப்
எப்போ வரும் எனும் ஏக்கம் எனக்குள் !
காணும்போதோ ஆனந்தம் !
சாரல் பட்டதில் சந்தோசம் !
நனைந்ததில் எனைமறந்தேன் !
தொடர்ந்து நனைந்ததில் -
சளி எனும் சனியன் தொற்றிக்கொண்டது !
படித்து பார்த்த மனைவியோ ;
பத்ரகாளியானால் !
"மழையை பற்றிதானே எழுதினேன்"
?????
சகுனிகளின் சூழ்ச்சியின் உதித்ததே ;
"சாகர்மாலா" !
சாமானியருக்கு புரியாத ;
சமஸ்கிரத வார்த்தை !
கடலை சுற்றி காவலர் கண்காணிப்பு !
கட்டுமரங்களும் காணாமல் போகும் !
காற்று வாங்கவும் கடிவாளம் !
சுவாசிக்கும் காற்றுக்கும் சுங்க சாவடி !
கண்ணுக்கு தெரியாத கடல் வளமெல்லாம் ;
கண்ணெதிரே காணாமல் போகும் !
வீதியில் நிற்கும் மக்களோடு ;
வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் !
எதிர்க்க துணிவிருந்தாலும் -
எதிர்க்கட்சி என்பது வலுவில்லாததால் ;
ஏக்கம் மட்டுமே !
ஏமாற்றம் ஒன்றும் புதிதல்லவே நமக்கு !
-தெரியுமா செய்தி நமக்கும் ஸ்கேன், ஆதார் அட்டை, புகைப்படம் எல்லாம் எடுக்கப்போறாங்களாம் !
-அப்படின்னா,வரபோற தேர்தல்ல நாமும் வேட்ப்பு மனு தாக்கல் பண்ணலாம்னு சொல்லு ?
-அப்படின்னா நம்மள்ல யாரை நிறுத்தறது ???
விழித்திடு தமிழா! உலகம் உனது !
வீதிக்கு வந்தால் வீண் வம்பு வருமே என்று :
வீட்டோடு நீ இருந்தால் :
வில்லங்கம் தேடி வரும் !
தனி ஒருவன் நான், என் செய்வேன் என நீயும் :
தயங்காதே ஒரு பொழுதும் :
தன்மானம் கூட -
தரை நோக்கி வீழ்ந்திடுமே !
சாதி மதம் பாராமல் :
சகோதரராய் பழகிப்பார் !
சாத்தான் கூட்டத்திற்கு -
சாகுமணி சப்தம் கேட்கும் !
ஆசை ஒன்றே :
அன்பை முறிக்கும் !
ஒருவனுக்காக ஓசை கொடு !
ஒற்றுமை தானாய் வளரும் !
ஜாதியை ஒழிக்க என்ன வழி?
பசித்தால் மட்டுமே -
பறந்து சென்று உணவை தேடும் !
உயர பறந்தாலும் கர்வமில்லை !
உறவை பிரிந்து இருந்ததுமில்லை !
வழி மறந்து போவதுமில்லை !
வருமானம் தேடி சேர்த்ததுமில்லை !
வட்டத்தை போட்டு வாழ்ந்ததுமில்லை !
வாழ்வை தொலைத்து அலைந்ததுமில்லை !
வேடனை கண்டு பயந்ததுமில்லை !
வேதனை என்று ஓய்ந்ததுமில்லை !
விடியலை தேடி வீறுகொள்ளும் !
விதியை வென்று வீடு திரும்பும் !
-ஏங்க தோக்க போற ஜாதி கச்சியில போய் கூட்டனி வச்சிகிட்டின்களே டெபாசிட் போய்டாது ?
-எப்படி போகும், யாருக்கும் தெரியாம தான் பல வங்கில டெபாசிட் பண்ணிட்டேன்ல.
இந்த்த வார தினமணி கவிதை மணியில் "இன்று புதிதாய் பிறந்தோம்" கவிதை வந்துள்ளது தோழர்களே
சவூதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலைக்கழகம்
ரியாத்: எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவூதி அரேபியாவில்தான் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலை கழகம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ளது. ரியாத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைகழகம் தொடக்கத்தில் Riyadh University for Women என்ற பெயரில் இருந்தது பின்பு இளவரசி நூரா பல்கலைகழகம் (princess noura bin abdul Rahman university(PNU) பெயரில் 2008ம் ஆண்டு மாற்றம் பெற்றது. பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் 60 ஆயிரம் பேர் கல்வி கற்கின்றனர். இங்கு 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் ...
மேலும் படிக்க