நேதாஜி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நேதாஜி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  09-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Dec-2015
பார்த்தவர்கள்:  609
புள்ளி:  99

என்னைப் பற்றி...

தமிழ் மேல் மிகுந்த பற்று கொண்ட பொறியியல் மாணவன் நான்!
என் எண்ணங்களைத் தமிழில் வெளிபடுத்த துவங்கிய பொது உண்டானது இந்த கவிதை மோகம்..கவிதைப் புத்தகம் வெளியிட வேண்டும் என்பதே என் இலட்சியம்!

என் படைப்புகள்
நேதாஜி செய்திகள்
நேதாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2018 1:09 am

குளிர் கொண்ட மார்கழியின்,
ஒளி மங்கும் மாலை இது!
சூரியனும் ஒய்வெடுக்கும்
இருள் சூழ்ந்த வேலை இது!!

துணை யாரும் இல்லாமல்,
நான் தொலைதூரம் செல்லுகையில்...
என் ஜன்னலோர சந்திரனே..
உன்னை சந்தித்ததில் இன்பமடி!

தூரமடி என் பயணம்..
உன் துணைவேண்டும் வருவாயோ!?
காடு மலை கடக்கவேண்டும்,
வழியில் இருள் போக்கி விடுவாயோ!?

நீ இன்றி யாருடன் நான்..
பயணங்கள் செய்திடுவேன்!?
நீ பகல் பொழுது போனதுமே..
துணையின்றி தனித்திருப்பேன்!

மேலும்

தூரமடி என் பயணம்.. உன் துணைவேண்டும் வருவாயோ!? காடு மலை கடக்கவேண்டும், வழியில் இருள் போக்கி விடுவாயோ!? -------அருமை நண்பரே 11-May-2018 1:23 pm
அருமை வாழ்த்துகள் 11-May-2018 1:47 am
நேதாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2018 12:59 am

சில்லென்ற காலம்...
உன் முகம் பார்க்கும் நேரம்
ஒரு வார்த்தை போதும்,
பெரு மழை வந்து போகும்!

பார்க்காமல் பார்க்கும்...
உன் பார்வை அறிவேன்!
உன்னை பார்க்கத்தானே..
நான் கல்லூரி வருவேன்.

தொலைவினில் நீ வர..
என் தைரியம் தோற்க்குமே!
கடந்து நீ போகையில்..
காற்றில் நறுமணம் கூடுமே!

பாடங்கள் ஏதும் நான்
கேளாது கிடப்பேன்...
உன் முனங்கல் போதும்
இசையென்று இரசிப்பேன்!

மாலை நீ சென்றதும் என்
நாள் அதுவும் முடியுமே!
நாளை நீ வரும் வரை
என் இராவதுவும் நீளுமே!

மேலும்

நன்றாக உள்ளது 11-May-2018 10:17 am
அருமை அருமை...முனங்கள் இதுவே சரியானது நண்பரே மாற்றுங்கள் நண்பரே 11-May-2018 10:15 am
நேதாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 10:38 pm

மேற்கோள் காட்டும் மெய் நிகர் மாந்தர்,,
இதுவே சரியென்றுரைப்பாரே...!
உன் போல் எவரும் உலகினில் இல்லை,
அயலார் சொல் செவி கேளாதே!

அறிவுரை கூறும் அரைக்கோமாளிகள்..
கொண்டதும் வென்றதும் இங்கென்ன!?
கூட்டினுள் அடைக்கும் கூட்டம் இதுவே...
கூற்றுகள் கேட்டு குழம்பாதே!!

உன் மனம், உன் உடல், உனதே வாழ்க்கை!!
அவன், இவன் யோசனை உனக்கெதற்கு??
உலகம் உனதே உணர்ந்திடு மனிதா!
உன் எல்லை வின்னென்று எவன் வகுத்தான்!?

மேலும்

நேதாஜி - நேதாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2018 12:21 am

NEET....

சீர்மிகு நாட்டின் சிந்தனை இதுவோ!?
சிறு கண்மணிகள் செய்தது தவறோ?
கல்வியின் கனவை கைப்பற்றிடவே. ..
அகதிகள் போல் இவர் அலைவது தகுமோ??

எம் நாட்டின் மகனவன் மருத்துவனாக...
தன்னுயிர் தந்த தந்தையும் இவரோ!?

அரசே! அரசே! அறம் அதை அறிவாய்!
கல்வியின் விலையாய் உயிரையும் கொடுத்தோம்!!
ஏனெனில்..

எங்கள் உரிமையை இழப்பது அதனினும் கொடுமை!

..................Nethajhi Kamal

மேலும்

படைப்பை வரவேற்கிறேன் எழுத இயலாதது ஒன்றும் அல்ல நம்மவர்களால் ஆனால் அவசியமே இல்லாமல் அடுத்த மாநிலங்களில்தான் எழுத வேண்டும் என்று கூறி அலைக்கழித்தது இங்கே பட்டம் பெற்றவர்களும் சிந்தனையாளர்களும் இருக்கிறார்களா என்பதையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது அதுவும் மிகவும் வித்தியாசமான வெட்கப்பட்டு கொள்ளும் அளவுக்கு விவரமற்றோர் நடத்திய சோதனைகள் காதணிகளை கையில் காட்டும் கயிறுகளையும் கேணைத்தனமாக சோதனை செய்ததே எனக்கு தெறித்து தமிழகத்துக்குத்தான் தேர்வெழுத வந்ததுண்டு என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தமிழகத்தில் இடமில்லை என்று தமிழகமே இடம் தேடி அலைந்ததேனோ இத்தகைய நிலைமைகள் இனி தமிழகம் மட்டும் அல்லாது வேற்று மாநிலங்களிலும் நடைபெறாது வண்ணம் தேர்வுகளை வெளிமாநிலங்களுக்கு மாற்றி அமைத்தால் ஒட்டுமொத்த மாணவர்களும் புறக்கணித்து அதே மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் நடத்தினால் மட்டும் எழுதுவோம் என்று கூறினால் சாத்தியமே 11-May-2018 8:57 am
படைப்பை வரவேற்கிறேன் எழுத இயலாதது ஒன்றும் அல்ல அம்மவர்களால் ஆனால் அவசியமே இல்லாமல் அடுத்த மாநிலங்களில்தான் எழுத வேண்டும் என்று கூறி அலைக்கழித்தது இங்கே பட்டம் பெற்றவர்களும் சிந்தனையாளர்களும் இருக்கிறார்களா என்பதையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது அது மிகவும் வித்தியாசமான வெட்கமாட்டுக் கொள்ளும் அளவுக்கு விவரமட்டோர் நடத்திய சோதனைகள் காதணிகளை கையில் காட்டும் கயிறுகளையும் கேணைத்தனமாக சோதனை செய்ததே எனக்கு தெறித்து தமிழகத்துக்குத்தான் தேர்வெழுத வந்ததுண்டு என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தமிழகத்தில் இடமில்லை என்று தமிழகமே இடம் தேடி அலைந்ததேனோ இத்தகைய நிலைமைகள் இனி தமிழகம் மட்டும் அல்லாது வேற்று மாநிலங்களிலும் நடைபெறாது வண்ணம் தேர்வுகளை வெளிமாநிலங்களுக்கு மாற்றி அமைத்தால் ஒட்டுமொத்த மாணவர்களும் புறக்கணித்து அதே மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் நடத்தினால் மட்டும் எழுதுவோம் என்று கூறினால் சாத்தியமே 11-May-2018 8:53 am
வாழ்த்துகள் நண்பா.. 11-May-2018 1:49 am
நன்றி 10-May-2018 10:30 pm
நேதாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2018 12:21 am

NEET....

சீர்மிகு நாட்டின் சிந்தனை இதுவோ!?
சிறு கண்மணிகள் செய்தது தவறோ?
கல்வியின் கனவை கைப்பற்றிடவே. ..
அகதிகள் போல் இவர் அலைவது தகுமோ??

எம் நாட்டின் மகனவன் மருத்துவனாக...
தன்னுயிர் தந்த தந்தையும் இவரோ!?

அரசே! அரசே! அறம் அதை அறிவாய்!
கல்வியின் விலையாய் உயிரையும் கொடுத்தோம்!!
ஏனெனில்..

எங்கள் உரிமையை இழப்பது அதனினும் கொடுமை!

..................Nethajhi Kamal

மேலும்

படைப்பை வரவேற்கிறேன் எழுத இயலாதது ஒன்றும் அல்ல நம்மவர்களால் ஆனால் அவசியமே இல்லாமல் அடுத்த மாநிலங்களில்தான் எழுத வேண்டும் என்று கூறி அலைக்கழித்தது இங்கே பட்டம் பெற்றவர்களும் சிந்தனையாளர்களும் இருக்கிறார்களா என்பதையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது அதுவும் மிகவும் வித்தியாசமான வெட்கப்பட்டு கொள்ளும் அளவுக்கு விவரமற்றோர் நடத்திய சோதனைகள் காதணிகளை கையில் காட்டும் கயிறுகளையும் கேணைத்தனமாக சோதனை செய்ததே எனக்கு தெறித்து தமிழகத்துக்குத்தான் தேர்வெழுத வந்ததுண்டு என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தமிழகத்தில் இடமில்லை என்று தமிழகமே இடம் தேடி அலைந்ததேனோ இத்தகைய நிலைமைகள் இனி தமிழகம் மட்டும் அல்லாது வேற்று மாநிலங்களிலும் நடைபெறாது வண்ணம் தேர்வுகளை வெளிமாநிலங்களுக்கு மாற்றி அமைத்தால் ஒட்டுமொத்த மாணவர்களும் புறக்கணித்து அதே மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் நடத்தினால் மட்டும் எழுதுவோம் என்று கூறினால் சாத்தியமே 11-May-2018 8:57 am
படைப்பை வரவேற்கிறேன் எழுத இயலாதது ஒன்றும் அல்ல அம்மவர்களால் ஆனால் அவசியமே இல்லாமல் அடுத்த மாநிலங்களில்தான் எழுத வேண்டும் என்று கூறி அலைக்கழித்தது இங்கே பட்டம் பெற்றவர்களும் சிந்தனையாளர்களும் இருக்கிறார்களா என்பதையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது அது மிகவும் வித்தியாசமான வெட்கமாட்டுக் கொள்ளும் அளவுக்கு விவரமட்டோர் நடத்திய சோதனைகள் காதணிகளை கையில் காட்டும் கயிறுகளையும் கேணைத்தனமாக சோதனை செய்ததே எனக்கு தெறித்து தமிழகத்துக்குத்தான் தேர்வெழுத வந்ததுண்டு என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தமிழகத்தில் இடமில்லை என்று தமிழகமே இடம் தேடி அலைந்ததேனோ இத்தகைய நிலைமைகள் இனி தமிழகம் மட்டும் அல்லாது வேற்று மாநிலங்களிலும் நடைபெறாது வண்ணம் தேர்வுகளை வெளிமாநிலங்களுக்கு மாற்றி அமைத்தால் ஒட்டுமொத்த மாணவர்களும் புறக்கணித்து அதே மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் நடத்தினால் மட்டும் எழுதுவோம் என்று கூறினால் சாத்தியமே 11-May-2018 8:53 am
வாழ்த்துகள் நண்பா.. 11-May-2018 1:49 am
நன்றி 10-May-2018 10:30 pm
நேதாஜி - நேதாஜி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2016 4:09 pm

நான் என் கவிதைகள் பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்....அதற்க்கு என்ன வழி முறை? எந்த மினஞ்சல் முகவரிகளில் அனுப்ப வேண்டும் என்று யாரேனும் அறிந்தால் கூறுங்கள்..

மேலும்

பல மாதங்களாக இத்தளத்தில் என் கவிதைகளை பதிவு செய்த பின்னரே இதழ்களில் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்ப்பட்டது! 28-May-2016 5:46 pm
நீங்கள் முதலில் இந்த எழத்து தளத்தில் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள் . அதனை அனைவரும் படித்து மகிழட்டும் பிறகு உங்களை தேடியே வரும் வாயிப்புகள் அதுவரை விடாது தமிழ் எழத்து.காமில் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள் . நாளைய வெற்றி நமதே ஜைஹிந்த் . அன்புடன் ராமன்மகேந்திரன் 28-May-2016 2:55 pm
மிக்க நன்றி ஐய்யா ! கண்டிப்பாக முயல்கிறேன் ..ஒரு சிறு திருத்தம், என் வயது 22 ;) 27-May-2016 11:38 am
அனேகமாக எல்லாப் பத்திரிகைகளுக்கும் இணையத்தில் தளம் முகவரி இருக்கிறது . அந்த முகவரிக்கு உங்கள் கவிதைகளை இணைத்து அனுப்புங்கள் . நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் . பிரபலப் பத்திரிகைகள் எல்லாம் இங்கிருந்துதான் வெளியாகிறது உங்கள் ஒரு சில கவிதைகளின் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள் .பத்திரிகை ஆசிரியரை அணுகுங்கள் . என் பெயர் கமல் ; நேதாஜி கமல் . 27 வயது இளைய கவிஞன் . உங்கள் அழகிய பத்திரிகையில் என் கவிதைகள் வரவேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொல்லி கவிதைகளை அவர் மேசையில் சமர்பித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும் . மறு வாரம் ஆச்சரியப்படும் அளவிற்கு கமலின் கவிதைகள் என்று பத்திரிகையின் இலவச இணைப்பாக வரக்கூடும் . அதற்கடுத்த வாரம் நான்தான் கமல் , உள்ளே வரலாமா என்று கேட்டுக் கொண்டே ஆசிரியர் அறையில் நுழைய வேண்டும். புன்னகையுடனும் பொற்கிழியுடனும் ஆசிரியர் காத்திருப்பார் . எதற்கும் சகல கலா வல்லி மாலையின் கடைசித் துதியை தியானித்து செயலைத் துவங்குங்கள் . அன்னை அருளுவாள் . சல்யூட் நேதாஜி அன்புடன்,கவின் சாரலன் 27-May-2016 9:02 am
நேதாஜி - நேதாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2015 8:34 pm

மனமே...

ஏன் மாறிக்கொண்டே இருக்கின்றாய்?
ஒன்று விட்டு ஒன்று தாவும்
குரங்கின் குணம் இன்னும் போகலையோ?
உயிராய் ஒன்றை நேசித்தால்;
மாறிட எண்ணம் தோன்றிடுமோ?

நிலையில்லா நீர்க்குமிழ் போல்..
நித்தம் நித்தம் மாறுகிறாய்!
நிலையில்லா உலகு இதுவெனவே..
நிலையற்று நீயும் போனாயோ?

எளிதாய் நீயும் மாறிவிட்டாய்..,
குழம்பித் தவிப்பவன் நான் தானே!!
சரியோ தவறோ தெரியாமல்,
நாளும் அழுவது என் விதியோ?

மாற்றம் என்பது அவசியமே..
அனால் அதில் இத்தனை அவசரம் கூடாது!!

உன் போக்கை அறிய முடியாமல்
புலம்பித் தவிக்கிறேன் நாள் தோறும்..!

நிலையாய் நின்றிடு என் மனமே..
நிமதி வேண்டும் என் வசமே..!
முடிவொன்று நீயும

மேலும்

தங்கள் கருத்துக்கும் என்னத்திருக்கும் மிக்க நன்றி ஐயா :) நிச்சயம் முயல்கிறேன் :) 19-Dec-2015 12:16 pm
காதல் மனத்தினை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் பலவிரிகளை கஜல் வழியில் வடிவமைத்து விடலாம் குரங்கு மென்மையான கஜல் வரிகளுக்கு பொருந்தாது இப்படி அமைத்துப் பார்க்கிறேன் ஏன் மாறிக்கொண்டே இருக்கின்றாய்? ஏன் நிறம் மாற்றும் பச்சோந்தி ஆகின்றாய் உயராய் ஒருவனையே நேசிப்பாய் தோழி நேசித்தால் மாறிட தோன்றுமோ சொல் நீ தோழி நிலையில்லா நீர்க் குமிழி போல் நித்தம் மாறுகிறாய் நிலையில்லாதது உலகு என்று ஞானம் போதிக்கிறாய் கடைசி வரிகள் பார்ப்பதெல்லாம் பிடிக்கும் அடைந்திட மனம் துடிக்கும் நினைத்துப்பார் ப்ரிய சகி உற்றது உனக்கே கிடைக்கும் ! உங்கள் கவிதையில் காதல் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் அதனால்தான் அதை கஜலாக்குவது எனக்கு எளிதாகிவிடுகிறது விரும்பினால் மற்ற வரிகளையும் இதைப் போல் வடிவமைத்துப் பாருங்கள் . கஜல் கமல் ஆகிவிடுவீர்கள் வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 19-Dec-2015 10:28 am
சிந்தித்து உணர்ந்தால் என்றும் உண்மை புரியும் நண்பரே@இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2015 10:58 pm
நேதாஜி - நேதாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2016 7:36 pm

உறக்கம் கொள்வதற்கே இரவென்று
எண்ணியிருந்தேன் இதுவரை!
எத்தனைப் பெரிய மூடத்தனம்!!

கன்னடம் கடந்து, தமிழ் தொட;
சர்க்காரின் வீதிகளில்...
சக்கரத்தின் மேல் கழிகிறது
நம் முதல் இரவு!!

என் வாழ்வின் மிக குறுகிய இரவு இது!
உன் வெட்ப்பதால்..
இரவைக் கூட கரைத்துவிட்டாயோ?

ஜன்னல் வழியே நிலவைக் கண்டதுண்டு!
இன்றோ..
நிலவே ஜன்னலோரம் அமர்ந்திருக்கக் காண்கிறேன்!!

இருளில் இரட்டிப்பானதடி உன் அழகு!
உன் முகம் பார்த்தால்..
கண்ணாடிக்கு கூட காதல் செய்ய தோன்றும்!!

என் மடியினை இருக்கையாக்கி..
இரு கை கொண்டு அணைத்தேன் உன்னை!
தாயிடம் தவழும் பிள்ளை போலே,
கண்மூடி நீ உறங்கும் அழகை,
காண கண்கோடி வேண்டும்

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2016 5:57 pm
அழகு!! 03-Apr-2016 3:42 pm
மிக அழகான வரிகள் !! 03-Apr-2016 2:04 pm
நேதாஜி - நேதாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2016 9:02 pm

இன்றுடன் ஓராண்டு..

என் துணையே..
அன்பு தோழியே..
உன்னுடன் ஓராண்டு..
கனவைப்போல கழிந்தது..!
கல்வெட்டாய் மனதில் பதிந்தது!

என் மனம் கொள்ளா வார்த்தை கொண்டு..
இன்பத்தால் நீ எனைக் கொன்று..
இன்றுடன் ஓராண்டு!

நம் மனதில் சுமந்த காதலை,
பிள்ளையாய்ப் பெற்றெடுத்து..
இன்றுடன் ஓராண்டு!

உன்னை சேராமல்..
கண்ணுறக்கம் அற்று..
கண்ணீர் வடித்த இரவுகள் முடிந்து,
இன்றுடன் ஓராண்டு!

உன்னை..
மனதினில் மணமுடித்து..
உரிமையுடன் மனைவியாக்கி..
இன்றுடன் ஓராண்டு!

ஊர் வியக்கும் பொக்கிஷமே...
உன்னை நான் போரிட்டு வென்று..
இன்றுடன் ஓராண்டு!!

உன்னுடன் ஓராண்டு..
என் வாழ்வின் பெருமிதம்!!

எனக்கு உல

மேலும்

நன்றி தோழரே 09-Jan-2016 4:27 pm
எத்தனை தடைகள் வாழ்வில் எல்லாம் வென்ற காதலின் வலிமையை போற்றுகிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2016 11:49 pm
உண்மையாக வா ....வாழ்த்துக்கள் ! 08-Jan-2016 11:37 pm
நேதாஜி - நேதாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2015 11:13 am

உனெக்கென வாழ்வாய் மனிதா..
என்றும்..
உழைத்திட மறவாய் மனிதா!

வாழ்வில்...
ஒவ்வொன்றும் ஒப்பீடு செய்தால்..
ஒருநாளும் ஓய்வில்லை உனக்கு!

சிறு பொழுது பேராசைக்கொண்டால்..
பல இரவு கண்ணுறக்கம் கொல்வாய்!

உன் வாழ்வே உனதென்பது மறந்து!
பிறர் வாழ்வை நீ வாழ விழைகிறாய்!

ஆழம் அறியா அலைச்சருக்குப் போன்றது
உன் ஆடம்பர வாழ்வின் ஆபத்து!

தேவைக்கே பொருள் சேர்ப்பாய்!
அளவுடனே ஆசை வைப்பாய்!

ஆசைக்கு எந்நாளும் அளவில்லை!
பேராசைக்கு ஒருபோதும் மருந்தில்லை!

காட்சிகள் தூண்டிய ஆசையின் விளைவுகள்..
உள்ளம் வலிக்கின்ற வேளையில் உணர்வாய்!

உன் கள்ளமில்லா பிள்ளைச் சிரிப்பு..
ஆசைகள் வளர அறவே அற்று போன

மேலும்

உன் கள்ளமில்லா பிள்ளைச்சிரிப்பு ஆசைகள் வளர அறவே அற்றுப்போனது நன்று...! 26-Dec-2015 4:02 pm
மிக்க நன்றி :) 26-Dec-2015 11:17 am
ஒவ்வொரு வரிகளும் நிதர்சன வரிகள்..... அருமை அன்பின் நல்வாழ்த்துக்கள்........ 26-Dec-2015 11:17 am
நேதாஜி - நேதாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2015 9:25 pm

காட்சி தர காசு கேட்கும்
கருணை கொண்ட இறைவா!!
பக்தி இன்று உன்னிடத்தே
வியாபாரம் ஆனது ஏன்?

நம்பிக்கையின் பலத்திநிலே
பணம் பார்க்க துவங்கியதும்,
உன்னை காணுகின்ற தூரம் கூட
பணத்தின் அளவை ஆனதுவே!!

கற்பூரம் மலர் கொண்டு பூசாரி பூஜிக்க,
பூசிவிடும் திருநீறும்,
தட்டின் கணம் கண்டு மாறிடுதே!!

இல்லார்க்கு இருக்கின்ற
ஒரு துணையும் நீ அன்றோ?
உன் பக்தியிலே வியாபாரம்
செய்வது தான் நன்றோ!?

காலனி முதல், கற்பூரம் வரை;
அர்ச்சனை முதல், அன்னதானம் வரை;
ENTRY முதல் EXIT வரை;
இன்று உன்னிடத்தில் எல்லாமே...
MONEY!! MONEY!! MONEY!!

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 6:30 am
நேதாஜி - ஜெஸ்வின் ஜெ அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2015 4:37 pm

சீதா ராமன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (32)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (33)

மேலே