pratheepa kannan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : pratheepa kannan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 176 |
புள்ளி | : 70 |
காதல் புரியா நெஞ்சினிலும்
காதல் கொணர்ந்தாய்......
ஏற்பதா மறுப்பதா புரியாமல்
குழம்பி நிற்கிறேன்.......
காதல் கனிய காத்திருக்கும்
நெஞ்சம் பல......
வீழ்ந்தேன் எனினும் துணிவில்லை
உண்மையை ஏற்க......
கோர்க்கத் துடிக்கும் விரல்களை
தடுப்பது ஏதோ......
பேசத் தவிக்கும் இதழ்கள்
மவுனித்தது ஏனோ......
என் கண்களின் மொழியறிந்து
புரிந்து கொள்வாயா......
--------- என் நேசகா......!!!
தூரதேசத்து தென்றல் ஒன்று
மனற்கூட்டில் குடியமர்ந்து
இசைத்தாளம் மீட்டுதே.......
போர்த்தொடுக்கும் இருவிழியில் நின்று
மனதிற்கான முத்தாய்ப்பு
வசீகரம் கூட்டுதே............
ஓர்நொடி ஸ்பரிசம் இன்று
காற்றினில் மறைந்திருந்து
கைவிரல்கள் தீண்டுதே.......
பிரிவும் நமக்குள் நன்று
காத்திருக்கும் காதல்
மோகம் கொள்ளுதே.......
என்னவள் நீயே என்று
உணரச்செய்யும் தருணம்
சுவாசம் ஆகுதே..........
அர்த்தமற்ற வெட்க புன்னகை
அலங்கரிக்க தேவையில்லை பொன்நகை.......
சொர்க்கமாகும் எத்தனை கானங்கள்
தேவையில்லை திகட்டும் பானங்கள்............
சுகமாகும் சுடுகின்ற தேநீர்
கைகளில் விளையாடும் மழைநீர் .............
உள்ளம் விரும்பும் தனிமை
ஏங்கித் தவிக்கும் இளமை........
விழிக்கத் தோன்றும் இரவுகள்
சிறகுகள் கோர்த்த கனவுகள்..........
உன்
காதலால் காதலை காதலித்து
தித்திக்கிறேன் காதலா....!!!!!!
கனவுகள் கலைந்த வாழ்க்கை
வாழ்கிறேன் தோழி
உனை பிரிந்த நாளாய்.........
செல்லாக் காதல் என்றால்
ஏற்றுக்கொள்ளும் மனமே
சொல்லாக் காதலால் கொல்கிறாய்......
மறுக்கும் உந்தன் இதழால்
சிக்கித்தவிக்கும் இதயம்
கதறித் துடித்தும் மறுக்கிறாய்.....
எனக்கான உன் காதல்
அறியுமென் நெஞ்சம்
கொடுத்துவிடு என்னிடம் அழகாய்........
என் தேவதையே!!!!!
தரணி ஆளும் கள்வனே..
கண்களால் கொலைகள் செய்யும் மாயவனே...
காதல் ஸ்பரிசம் தவிர்த்து
எட்டா உயரத்தில் நின்றேன்....
நிதானம் கொண்ட வார்த்தையில்
எனை மறந்து இறங்க வைத்தாய்....
குறுகுறுப் பார்வையில் மனதின்
மொழியில் இசை மீட்டினாய்..
அர்த்தம் புரிந்தே தொலைவில் நின்றாய்
நம் உறவுக்குள் நெருக்கம் தந்தாய்....
தேடல் கொண்ட பேதையினை வதையாதேக்
கண்ணா...
கைகள் கூடட்டும் ஈரம் சேர்க்கட்டும்...
உதட்டின் புன்னகை வேட்கையில் துடிக்கட்டும்...
உலகப்போர் வேண்டாம் காதலா....
உலகம் மறக்கும் போர்த் தொடுப்போம்...!!!
இதயமே!!
நில்லாதே...
எனைக் கொல்லாதே....
மனம் தாங்காதே....
விழித் தூங்காதே...
நினைவே!!
தொடருமே....
என் சுவாசமே....
என்னுயிர் வாசமே....
வாழுமே என் நேசமே....
காதலே!!
சேர்ந்துவிடு.....
மூச்சினில் கலந்துவிடு....
உரிமைகள்க் கோர்த்துவிடு....
என்னுள் நீ கரைந்துவிடு.....
கள்வனாக வாழவே விருப்பம்
உன் மனதைக் கொள்ளைக் கொள்ள
ஆசைக் கொண்டதால் . . .
சிறை வாழ்க்கை மீதேக் காதல்
உன் இதயக் கூட்டில் வாழும்
வாழ்க்கையே விருப்பமானதால். . .
இருள் சூழ்ந்த நாட்களே போதும்
உன் கண்களுக்குள்க் கண்மனியாக நான்
என்றும் வாழ்வதானால். . .
மௌன மொழியில் வாழ்வதே சம்மதம்
உன் உதடுகளில் ஒன்றாய் நான்
தோன்றி சிரிப்பதானால். . .
உருவம் இன்றியும் வாழத்
துணிவேன் உன் உயிருக்குள் என்
உயிரை கலப்பதானால் . . .
என் உயிர்க் காதலே!!!
உன் மேல் பலருக்குக் காதல்
உன்னுடன் சிலருக்கு மோதல்!!
உனை அறிந்தோருக்கு நீ கிடைப்பதில்லை
கிடைப்போருக்கு உன் அருமை புரிவதில்லை!!
கண்ணால்க் கண்டும் பலருக்கு
உனைத் தொடும் பாக்கியமில்லை...
உனை கண்களால் காணக்
கூட சிலருக்கு பாக்கியமில்லை!!
உனைத் தூர வீசும் கைகள்
இல்லா வயிற்றின் சாபங்களையும்
உலகின் கொடியப் பாவங்களையும்
பிணவறைக்கு அள்ளிச் செல்லும்!!
உன்னுள் நன்மையும் தீமையும்
சேர்ந்தே கிடக்கும்...
அதை
அறிந்தவன் சுகமாய் வாழ்வான்
அறியாதவன் வாழ்வின்றி மடிவான்!!
உனை உயிர்த்தவனை
மறந்தவன் மூடன்...
மதிப்பவன் மனிதன்!!
இன்றும் என்றும் என்றென்றும்
உன்னால் வாழ்வேனே நான்
--- உ
முன்னோட்டம்
கதவை திறந்தாள் உமா. கையில் கேரி கவருடன் உள்ளே வந்தான், கார்த்திக். கேரி கவரை கட்டிலில் வைத்தவன் “ஏண்டி கதவை திறக்க இவ்வளவு நேரம்? தூங்கீட்டியா? ஓங்கி உட்டேன் னு வை” என்று கத்தியபடி, பாத் ரூமிற்குள் சென்றான்.
அவள் கட்டிலில் போய் அமர்ந்தாள்.
அவன் துண்டை எடுத்து துடைத்துக் கொண்டே, கட்டிலில் வந்து அமர்ந்தான். “ஹலோ மேடம்! சாப்பிடலாமா?” என்று சொல்லி கொண்டே, கேரி கவரில் இருந்த சாப்பாடு பொட்டலத்தை வெளியே எடுத்தான்.
அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
வியப்புடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
இளன்சிவப்பாய் சின்னஞசிறு கால்களை உதைத்து
கண் திறவாது கெஞ்சலும் அழுகையுமாய் சிணுங்கி
என் மடி மீது ஆடவந்த என் மாணிக்கமே
என்னை தாயாய் மாற்றிய என் செல்வமே.
உன் விரல் நுனி அசைந்தாலும் உடல் சிலிர்த்து போவேனே
பாலூட்டி தாலாட்டி உன் ஒவ்வொரு அசைவையும்
நான் பிறந்த பயனை எய்தியதாய் களிபுற்றேனே.
நீ ஒவ்வொரு அடி எடுத்து வைத்து நடக்கையில்
கால் நோகுமோ பாதம் நோகுமோ என்று உன்
செவ்விரு பாதங்களை தடவி கொடுப்பேனே
என் துயர் யாவும் போக்கினையே என் முத்தே.
நான்கு வயதில் உன்னை பள்ளியில் சேர்த்தேன்
நீ பள்ளிக்கு சென்றிருந்தாலும் உன் மழலை சொல்
வீட்டில் எதிரொலிக்க இன்புற்றேன் என் மரகதமே
நீ வரும் வழி பார்த்து
கார்மேகக் கூந்தல் உடையாள்
கயல்விழி பார்வையாள்
மெல்லிடையாள்
நாணங் கொண்ட நடையாள்
என
மென்மையான பெண்மையால்
எனை வர்ணித்து முடக்க வேண்டாம்
எனை சீண்டிப்பார்
நானும் வெடிப்பேன்
எரிமலையாக!!