உனக்காக நான்

தரணி ஆளும் கள்வனே..
கண்களால் கொலைகள் செய்யும் மாயவனே...
காதல் ஸ்பரிசம் தவிர்த்து
எட்டா உயரத்தில் நின்றேன்....
நிதானம் கொண்ட வார்த்தையில்
எனை மறந்து இறங்க வைத்தாய்....
குறுகுறுப் பார்வையில் மனதின்
மொழியில் இசை மீட்டினாய்..
அர்த்தம் புரிந்தே தொலைவில் நின்றாய்
நம் உறவுக்குள் நெருக்கம் தந்தாய்....
தேடல் கொண்ட பேதையினை வதையாதேக்
கண்ணா...
கைகள் கூடட்டும் ஈரம் சேர்க்கட்டும்...
உதட்டின் புன்னகை வேட்கையில் துடிக்கட்டும்...
உலகப்போர் வேண்டாம் காதலா....
உலகம் மறக்கும் போர்த் தொடுப்போம்...!!!