பெண்ணே உன்னை நீ அறிந்துகொள்
வீட்டை ஆள தெரிந்து கொண்டால் பெண்ணே
நாளை நீ இந்த நாட்டை ஆளலாம்
கண் அவன் கணவன் என்பதெல்லாம் சரிதான்
அவன் தவறான பாதையில் சென்றான் எனில்
தயங்காமல் தட்டி கேட்டிடு திருத்த பார்த்திடு
நித்தம் குடித்து வீடு திரும்பும் கணவனை
கண்டுகொள்ளாமல் விட்டுவிடு சில நாள்
மாற்றம் இல்லை எனில் அவனை விட்டு விலகிவிடு
வாழ்க்கையில் சோதனைகள் வருவது இயற்க்கை
பெண்ணே நீ அவற்றை ஒரு வீராங்கனையாய்
எதிர்த்து எதிர்நீச்சல் போட்டிடு
வெற்றி உனக்கே என்பதை அறிந்திடு
பெற்ற பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாய் வளர்த்திடு
நாடு போற்றும் சான்றோர்களாய் ஏத்தி விடு
பெண்ணும் ஆணும் நீதியின் முன் சமமே
இதை மனதில் திட்டமாய் வைத்திடு பெண்ணே
பெண்ணின்றி மனித வர்கம் இல்லை என்பதை
ஆண்கள் அறிந்திட வேண்டும் பெண்ணே
உன்னை வீணே அடிமையாக்க நினைதுவிடில்
கொற்றவையை எதிர்த்து நின்று போராடு
சமத்துவம் உன் பிறப்புரிமை பெண்ணே
உனக்கென்று தன மானம் ஒன்று உண்டு
அதை வீணே எரிந்து விடாதே
வீட்டில் கொத்தடிமையாய் வீழ்ந்து விடாதே
வீட்டை ஆள கற்றுக்கொள் பெண்ணே
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
வீட்டை ஆள தெரிந்து கொண்டால்
நாளை நீ இந்த நாட்டையே ஆளலாம்
தெரிந்து கொள் பெண்ணே .