பக்க வாதம்
பக்க வாதம்
வீட்டு வாசலுக்கு
வாய் வாய்த்திருந்தா
வந்தவனையும் வரப்போரவனையும்
மதிப்பீடு போட்டிருக்கும்….
போனவன் புலம்பல் கேளாது !
வருவாயிக்கு
வாய்ப்பிருந்தா
விலைப்பட்டியலை விசாரித்திருக்கும்
வியர்வையை குறிப்பரிந்து ……..
வீன் விவாதம் எடுபடா போக !
நினைத்து நிற்க
நின்ற காரியங்கள்
ஏக்கம் பெருக்கெடுத்து ஓட
எடுத்துவைத்த ஏணி காணவில்லை
கால்கள் எதுவென்று காண முடியாமல் போக
சிந்தனை சிற்பி
சிக்கனமாக சிந்திக்க
சில்லரைகள் தேரோட்டம்
பத்துவிரலை கண் பார்க்க
பக்கவாதம் புது கடனாளி
பக்கத்து வீட்டு கதவை தட்டியாச்சு !