நிரூபித்துவிடு

நிரூபித்துவிடு...!
01 / 03 / 2025

சாமிக்கு நேர்ந்த பலிஆடாய்
பூமி சுமக்க எருமைமாடாய்
அடங்கி கிடந்தது போதுமடா
பூமி அதிர எழுந்துவிடு - அந்த
சாமி வியந்திட உயர்ந்துவிடு
கூனிகுறுகியது போதுமடா - நீ
கூன் நிமிர்த்தி நடந்திடடா
குனியக் குனியத்தான் குட்டுவிழும் - நீ
குனிந்தது போதும் தலைநிமிரடா
பார்வையை அகல விரித்திடு - வாழ்வின்
பாதையை நீயும் சமன் செய்திடு
கசடற கல்வியை கற்றிடு - பல
கலைகளை உன்னுள் வளர்த்திடு
உண்மையை சொல்லிலே வைத்திடு
திண்மையை செயலிலே காட்டிடு
அடக்குபவன் மனிதன்தான் புரிந்திடு - நீயும்
அடக்கியாள நாளும் பயின்றிடு
தயக்கங்களை போட்டு உடைத்துவிடு - வீண்
தர்க்கங்களை சபைதனில் தவிர்த்திடு
பயந்தனை மண்ணில் புதைத்துவிடு - உன்
சுயம்தனை ஆழமாய் பதிவிடு.
தீயாக வாழ்வினில் எரிந்துவிடு
நீ யார்? என்பதை நிரூபித்துவிடு!

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (1-Mar-25, 9:57 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 4

மேலே