கண் நீர்
கண் நீர்
படுத்த கட்டில்
பலவந்தமா கேட்டது கேட்கிறதா !
சின்ன வயதில
எதிரி குதிச்ச……
வயது போக
கவனமா சாய்ந்த……
இப்போ
உட்கார்ந்து பார்க்கிறாய்
நாமா இப்படி மாறிவிட்டோம் என்று !
எல்லா மரக் கட்டிலும்
சபதம் செய்து கொண்டதால்
படுத்த ஆசாமிகளும்
எங்கள் கேள்வி மேடையில்
வரவு செலவு கணக்கு
நினைவில்லா தாக்குதல் பிணி
முதல் அத்தியாயம் தொடரும்…….
சொந்த பந்தம்
பலவாராய் வியக்க…
எதுவோ
என்னை விடும் !
மற்றவர் பிரச்சனையில்
ஈடுபடுவது முறையாகாது !
கற்ற பாடம் கருத்தாய் நின்று
தன் கடமையை சரியாய் செய்கிறது
தடுத்த நிறுத்தி கர்ம வினையை விலை பேசவா !
தைரியம் எப்படி வரும் கட்டில் கால் ஏங்க
குறித்த நாள் மறு விஜயம் பூர்த்தியாக
வரவேற்பு தடபுடல் படு நிகழ்ச்சி
கிட்டியது கட்டில் மேல் கிடத்தி
கட்டை ஆடியது ஒரு கனம்
சென்றது கடை மூச்சு
தொலை தூரம்
துயரம் சிந்தியது
ஒரு துளி ……நீர் !