கோவை சுபா - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கோவை சுபா |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 28-Apr-1953 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 19673 |
புள்ளி | : 1340 |
சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் என்ற எனது இயற்பெயரை "சுபா" என்றுதான் என்னுடய தமிழ் ஆசான் மறைந்த திரு.சர்வோத்தமன் அவர்கள் என்னை அழைப்பார். அவரது நினைவாக எனது பெயரை, எனது ஊரான கோவை மாவட்டத்துடன் இணைத்து "கோவை சுபா" என்று புனைப் பெயராக வைத்து கொண்டேன்.
நான் 1970--ம் வருடத்தில் இருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய "மனம் மறப்பது இல்லை" என்ற சிறுகதை 28.04.1973- ஆம் வருடம் "மாலை முரசு" பத்திரிகையில் வெளிவந்தது..அன்று தான் எனது 20 வது பிறந்தநாள். அதன் பிறகு பல கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன்.
தொலைபேசி துறையில் (BSNL) 1976-ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அந்த துறையின் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டம் கொண்டேன். எனவே எழுத்து உலகில் இருந்து சற்று விலகி இருந்தேன். 2010-ம் வருடம் ஓய்வு பெற்றேன். தற்போதும் BSNL Pensioners Assn. செயலாளராக இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை, எனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இந்த "கொரோனா" ஊரடங்கில், உறங்கி கிடந்த என் இலக்கிய ஆர்வத்தை துயில் எழ செய்து, பல கிறுக்கல்களை கவிதையாக படைத்து வருகிறேன் உங்கள் வரவேற்புடன்.
நன்றி...வாழ்க நலமுடன்.
--கோவை சுபா
மின்னிடும் மேனியில் மின்னல் ஒளிக்கீற்று
மின்னும் விழிகளில் மீனினம் துள்ளுது
கன்னங் கருங்குழலில் கெட்டிமல்லிப் பூச்சரம்
கன்னங்கள் செம்மங் கனி
அடுத்தவரை ஏமாற்றி
நீ பெறுகின்ற வெற்றி
உன் மனதை உறுத்தும்
அதே சமயம் நீ போராடி
அடைகின்ற தோல்வியால்
உன் மனதில் வருத்தமிருக்கும்
நிச்சயம் உறுத்தல் இருக்காது ...
--கோவை சுபா
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியிலா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன்
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க !
பழனி குமார்
10.09.25
ஒன்று சேர்ந்த
அன்பு உள்ளத்தில்
காதல் நதி
சீராகப் பாயும் வரை
சோலைவனமாக
செழிப்பாக வளரும்
பாதை மாறி பயணம் செய்யும் போது
உணர்வுகளின் வெளிப்பாட்டில்
உஷ்ணங்கள் தோன்றும் போது
உள்ளத்தில் காதல் நதி வற்றிப்போய்
பாலைவனமாக காட்சி தரும் ...!!
--கோவை சுபா
கண்ணாடி முன் நின்றேன்
கற்பனை பிம்பங்களை காண்பதற்கு
எவ்வளவு முயற்சித்தும்
காண இயலவில்லை
கண்மூடி அமர்ந்து சிந்தித்தேன்
மனமெனும் கண்ணாடியில்
மாயா ஜாலம் போல்
பிம்பங்களின் நடமாட்டம்
தெளிவாகத் தெரிந்தது
நாலும் தெரிந்தவர்கள்
சிந்தனையை தான்
"ஞானம்" என்கின்றார்களோ?
--கோவை சுபா
விம்மி வெடித்து
சிந்திய கண்ணீரில்
மனித மனதின்
துன்பங்கள் யாவும்
கரைந்தது ....
- - கோவை சுபா
தேநீர்நற் கோப்பையில் தென்றல் தவழ்ந்திட
தேனித ழைப்பதித்து தேநீர் பருகிடும்நீ
மானின் விழியினால் மௌனமாய் பார்த்தபோது
தேனோடை பாயுதுநெஞ் சில்
புல்லாங்குழல் எல்லோர்
கையில் இருந்தாலும்
எல்லோரும்
கலைஞனாக இயலாது
வாசிக்க தெரிந்தவனே
கலைஞன்
மற்றோரெல்லாம்
ரசிகர்களே....!!
--கோவை சுபா
ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !
ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா