Deepan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Deepan |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 23-May-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 73 |
ஓய்வு பெற்ற அரசு வங்கி மேலாளர். தமிழிலும் இசையிலும் ஆர்வம் உண்டு. சென்னை, நங்கநல்லூரில் "ஞாலம்" "ஏரிக்கரைஇலக்கிய வட்டம்", "திருக்குறள் பேரவை", "புழுதிவாக்கம் இலக்கிய மன்றம்" இவைகளில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றங்களில் கவிதைகள் வாசித்துள்ளேன். கவியரங்கத் தலைவராக இருந்துள்ளேன். "இன்பத் தமிழ்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியுள்ளேன்.
இப்பொழுதெல்லாம்
பேரூந்தில்
ஆண்கள் எங்களை உரசுவதேயில்லை.
நன்றி கொரோனா!!!!
இப்படிக்கு,
ஒரு பெண்.
ச.தீபன்
வெறுக்கிறேன்.
உன்னை வெறுக்கிறேன்.
வேண்டாமென ஒதுக்கிய
தீண்டாமை கொடுமையை,
மீண்டும் கொணர்ந்து
சீண்டும் கொரோனா,
உன்னை வெறுக்கிறேன்.
ஒரு நிம்மதி.......
இந்தத் தீண்டாமைக்கு,
சாதி மத பேதம் இல்லை.
ச.தீபன்
வண்ணம் குழைத்து,
வரைந்தெடுத்தேன். உன்
வனப்பான வடிவழகை.
எண்ணம் துளைத்து
இளைத்துவிட்டேன், உன்
வளமான மனதழகில்.
தேகம் முழுதும்
திளைக்கும் ஓவியமே,
தேனாக இனித்து
தித்திக்கும் காவியமே,
நினைவாலே மனதோடு
நின்றிருக்கும் நித்தியமே,
நித்தம் நித்தம் ஏங்கி என்
நித்திரை தொலைத்தவளே.
விழியோடு விழிவைத்து
விழிவழி மொழி பேசு.
விழிவழி வழியும் காதலை
வேல் விழியாளே நீ பேசு.
உன் கரம் சேர, கால் கடுக்க
நிற்கின்றேன்.
கண்ணசைத்தால் கடுகி நான்
வருகின்றேன்.
ச. தீபன்
9443551706
பட்ட துயரங்கள் போதுமென்று
பாட்டாலே நான் சாடுகின்றேன்
கிட்டத்தில் எட்டுகின்ற புத்தாண்டில்
கொட்டட்டும் வளமை என்று
பாடுகின்றேன்
புவியில் இன்பம் சத்தியம் புரளும்,
நான் பறை சாற்றுகிறேன்.
கவிஞன் சொல் நிச்சயம் வெல்லும்
புத்தாண்டை போற்றுகிறேன்
வரும் புத்தாண்டே, நல்முத்தாண்டே,
வறுமை சிறுமை இவையொழித்து, நீ
பெருமை கொள்ள ஏங்குகிறேன்.
வற்றாத செல்வம் பல தந்து,எமை
முற்றாக மீட்டெடுக்க உனை
வணங்குகிறேன்.
வரும் ஆண்டு நல்லாண்டாய்
மிளிர்ந்திடவே,
வந்தீண்டு புத்தாண்டே
நீ ஒளிர்ந்திடுவாய்.
ச.தீபன்
94435 51706
குப்பையில் போடத்தான் நீ
கர்ப்பப் பையில் சுமந்தாயா?
குப்பையிலே வாழ ஒத்திகை
கர்ப்பப்பையிலே தந்தாயா?
எச்சியிலை தஞ்சம் உண்டு.
பிச்சிப் பூ மஞ்சம் இல்லை.
உச்சி மோந்து கொஞ்சிட,
இங்கே
வச்சுப் போன தாயுமில்லை.
இரும்பாலான இதயம் உனக்கு.
அதுதான்
குப்பையிலே உதயம் எனக்கு.
ஊருக்குத் தெரியாமல்
உறவாடியதன் எச்சம்,
குறுக்குசாட்சி சொல்ல
கூண்டில் ஏறுமென்றா,
எச்சில் தொட்டியை நீ
என் கட்டிலாக்கினாய்.
பழுதான சமூகம் உன்னைக்
கழுவி ஊற்றுமென்றா
கழுவாமல் எனைக் கிடத்தி
மெதுவாக நழுவி விட்டாய்.
அரசாங்கத் தொட்டிலென்றால்
ஏதாவது
அடையாளம் தெரியுமென்றா,
அசிங்கத் தொட்டியிலே என்னை
அனாதையாய்ப் போட
குப்பையில் போடத்தான் நீ
கர்ப்பப் பையில் சுமந்தாயா?
குப்பையிலே வாழ ஒத்திகை
கர்ப்பப்பையிலே தந்தாயா?
எச்சியிலை தஞ்சம் உண்டு.
பிச்சிப் பூ மஞ்சம் இல்லை.
உச்சி மோந்து கொஞ்சிட,
இங்கே
வச்சுப் போன தாயுமில்லை.
இரும்பாலான இதயம் உனக்கு.
அதுதான்
குப்பையிலே உதயம் எனக்கு.
ஊருக்குத் தெரியாமல்
உறவாடியதன் எச்சம்,
குறுக்குசாட்சி சொல்ல
கூண்டில் ஏறுமென்றா,
எச்சில் தொட்டியை நீ
என் கட்டிலாக்கினாய்.
பழுதான சமூகம் உன்னைக்
கழுவி ஊற்றுமென்றா
கழுவாமல் எனைக் கிடத்தி
மெதுவாக நழுவி விட்டாய்.
அரசாங்கத் தொட்டிலென்றால்
ஏதாவது
அடையாளம் தெரியுமென்றா,
அசிங்கத் தொட்டியிலே என்னை
அனாதையாய்ப் போட
ஈரிரண்டு கண்கள் கவ்வி அவர்
ஈரிதயம் ஒன்றான அந்நொடியை,
"பாடம் படித்து நிமிர்ந்த விழிதனில்
பட்டுத் தெரிந்தது மானின் விழி" என்று,
பழச்சாறு தமிழில் பாரதிதாசன்,
கவிச்சாறு கொட்டிப் போனான்.
காதல்முள் தைத்த அக்காயத்தில்,
கவிமருந்து வைத்துப் போனான்.
"காதலடி நீயெனக்கு,
காந்தமடி நானுனக்கு"
எனும்
கவிதை நீரூற்றி காதல் வேர்கள்
கால்பரப்ப நாற்று நட்டான் பாரதி.
"சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை". என்று
கவிபாடி, கனவுலகில் காதலிக்க
கைகொடுத்து இட்டுப் போனான்,
கவியின் அரசன் கண்ணதாசன்.
சந்தித்த வேளையில் அவன்
சிந்தித்து வருவதா காதல்?
புருவ வில்லெடுத்து பார்வைச்
ச
பனையோலை ஏடெடுத்து,
பைந்தமிழை விரலுடுத்தி,
பாகு தமிழ் வகிடெடுத்து,
பாற்கடலோன் புகழ் சொல்ல
பல நூறு பாட்டெடுத்தான்,
பாருள்ளோர் வியந்த நிற்க.
வல்லின தாடகை
வதம் முடித்து,
இடையின அகலிகை
கல்லிடை மீட்டு,
மெல்லின சீதையின்
நுண்ணிடை சேரும்,
ஒப்பற்ற காவியத்தின்
ஓட்டத்திலே,
ஓங்கு மொழிச் சிறப்பை
ஒட்டியிருந்தான்.
வில்விடு அம்பின் வேகம் காட்ட,
சொல்லில் சுடுசரம் கட்டுகிறான்.
சொல்லென உட்புகும் கூர்அம்பு
பொருளெனப் போகும் வேளை,
சொல்லுக்கும் பொருளுக்கும்
எல்லை வகுத்துச் சொன்னான்,
சொல்லின் சுரங்கத்து
சொந்தக்காரன்.
சரயு நதி உலகுக்கு கொடுப்பது
நீரில்லை, அது
பரவும் நீராய்ப் பாருக்குத
பாதை மாறி பாதியிலே
தொலைவதற்கு,
போதை தேடி வீதியிலே
அலைகின்றான்.
சாராயம் வாய் நுழைந்து,
சரம்சரமாய் வயிறிரங்கி,
செங்குருதி ஊடாய் நீந்திப்
போகும்.
செந்நிறப் பாதையில்
நங்கூரமிட்டு,
சிறிது சிறிதாய் நஞ்சு
பாய்ச்சும்.
பயணித்த நஞ்சின் வீரியத்தில்,
பஞ்சான கல்லீரல் கல்லாகும்.
கழிவகற்றும் உறுப்புகளை
களையெடுத்து,
கடைசி நாளைக் கல்லறையில்
குறித்து வைக்கும்.
மங்கையரும் மதுவருந்தி, இந்த
மண்ணின் நியதி மீறுகின்றார்.
காரிகை பருகும் தீங்கான மதுவாலே,
கருவான விதை நெல்லும் பழுதாகும்.
பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்,
இங்கே மண் போட்டு மூடிவிட்டார்.
சீரழியும் பண்பாட்டை சீரமைக்க,
ஓரணியில் ஒன்றுபட்டால் உண்டு.
கள்ளின் ம
நண்பர்கள் (35)

குரு ராஜ்குமார்
சென்னை

சக்திவேல் சிவன்
சிங்கப்பூர்

சேக் உதுமான்
கடையநல்லூர்,நெல்லை
