மது
பாதை மாறி பாதியிலே
தொலைவதற்கு,
போதை தேடி வீதியிலே
அலைகின்றான்.
சாராயம் வாய் நுழைந்து,
சரம்சரமாய் வயிறிரங்கி,
செங்குருதி ஊடாய் நீந்திப்
போகும்.
செந்நிறப் பாதையில்
நங்கூரமிட்டு,
சிறிது சிறிதாய் நஞ்சு
பாய்ச்சும்.
பயணித்த நஞ்சின் வீரியத்தில்,
பஞ்சான கல்லீரல் கல்லாகும்.
கழிவகற்றும் உறுப்புகளை
களையெடுத்து,
கடைசி நாளைக் கல்லறையில்
குறித்து வைக்கும்.
மங்கையரும் மதுவருந்தி, இந்த
மண்ணின் நியதி மீறுகின்றார்.
காரிகை பருகும் தீங்கான மதுவாலே,
கருவான விதை நெல்லும் பழுதாகும்.
பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்,
இங்கே மண் போட்டு மூடிவிட்டார்.
சீரழியும் பண்பாட்டை சீரமைக்க,
ஓரணியில் ஒன்றுபட்டால் உண்டு.
கள்ளின் மடியில் களித்திருந்தால்,
கலாச்சாரம் தானே கனிந்திடுமா?
மயக்கத்திலே உலவுகின்ற
உன்னாலே,
மண்ணிலே ஒருவருக்கும்
பயனில்லை.
இருக்குமிடம் இருட்டு.
தெரியவில்லை உனக்கு.
கிழித்து வா இருளை.
ஒளி தெரியும் உனக்கு.
ச.தீபன்
94435 51706
மண்ணிலே ஒருவருக்கும்
பயனில்லை.
இருக்குமிடம் இருட்டு.
தெரியவில்லை உனக்கு.
கிழித்து வா இருளை.
ஒளி தெரியும் உனக்கு.
ச.தீபன்
94435 51706