இறுதியில் மனிதன்
இறுதியில் மனிதன்
************************
அசையும் சொத்தும்
அசையா சொத்தும்
அசைவற்ற உடலுக்கு
அனு யளவும்
பயண் யேதுமில்லை
இறுதியில் புறம்போக்கு
இடத்தின் ஆறடி
இடுகாட்டுப் பள்ளமும்
இலையாக மடியும் வரையே
இறந்தவருக்கு சொந்தம்..
கோடி ரூபாய் ஆடையும்
கூட வரவில்லை
கோமணத்து அளவிலான
கோடித் துணி யென்னும்
கிழிசல் துணியே
ஆடி அடங்கிய உடலுடன்
கூட வரும்..
உயர் ரக வாகனம்
உடன் இருந்தும் உயிரற்ற
உடல் தாங்கும்
அமரர் ஊர்தியை
அடைக்கலம் தருமே..
பிச்சை யெடுப்பவனும்
பிச்சை போடுபவனும் -உயிர்
பிரிந்தால் அவன் பிணமே..
காசை சம்பாதித்தாலும்
உறவை சம்பாதித்தாலும்
புதைப்பது தனிமையில் தானே..
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா ஞான அ பாக்யராஜ்