அத்தை மகளே

அத்தை மகளே அழகொளிரும் நிலவே
நித்தமும் வந்தெனை நிர்மூலம் செய்வதேன்
முத்தம் தருவதாய் முற்றும் தருவதாய்
சத்தம் செய்தென் சயனம் கழைவதேன்
சித்தம் சிதைந்தேன் சிந்தை மறந்தேன்
பித்து பிடித்து உன்மீது உன்மத்தம்
கொண்டேன்
தத்தைக் கிளியே என் தாபம் தெளிய
அருகே வா கனியே அன்பைத் தா இனியே
அஷ்றப் அலி