நேபாளம்
நேபாளம்
__________________________
கைபேசி போதும்.
சொல் படைத்து
சொல் தின்று
பசியாறலாம்.
குதியாட்டம் போடலாம்.
ஆட்டமும் பாட்டமும்
அலைகளாகி
அனைத்தையும்
அமிழ்த்திடும்
நிலை வரலாம்.
பூங்குமிழி மழலைகள்
மத்தாப்பு கொளுத்தலாம்..
ஆனால்
மக்கள் ஆட்சியின்
இதயம் தின்னும்
ஆதிக்க முதலைகள்
தலை காட்டும்
பேரிடர் அங்கே
களையப்பட வேண்டும்.
அறிவு வெளிச்சம்
ஒளிர்ந்திட வேன்டும்.
அழிவின் சுவடுகள்
நொறுங்கிட வேண்டும்.
சமுதாய ஓர்மை
வென்றிட வேண்டும்.
____________________________________