ருத்ரா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ருத்ரா
இடம்:  மதுரை (தற்போது kalifOrniyaa
பிறந்த தேதி :  01-Jun-1943
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-May-2012
பார்த்தவர்கள்:  1283
புள்ளி:  950

என்னைப் பற்றி...



என் படைப்புகள்
ருத்ரா செய்திகள்
ருத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2020 8:10 am

கண்ணொடு கண்ணோக்கின்
==============================================ருத்ரா

கண்ணொடு கண்ணோக்கின்..
என்று
முடிந்து விட்ட பிறகு
என்னவோ
"ப்ரோபோஸ்"பண்ணறது அது இது
என்றெல்லாம்
சடங்குகள் இருக்கிறதாமே
காதலுக்கு?
அப்புறம் அந்த
அந்த ரோஜாவை நீட்டி
அதையும் கொச்சைப்படுத்தி
கருக வைத்து...
"ஓ காதலே!
உனக்கு இத்தனை சித்திரவதைகளா?"

=====================================================

மேலும்

ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2020 1:54 pm

சாய்வு நாற்காலி........
===========================ருத்ரா இ பரமசிவன்


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
என்று
நாலாங்கிளாஸில் சத்தம் போட்டு படித்தோம்.

ஒன்றும் புரியவில்லை.

"அன்னையும் தந்தையும் தானே"...
அப்போதும் எம்.கே.டி.பாகவதரின்
கணீர்க்குரலில் வடிந்த தேனை
நக்கியவர்களாக மட்டுமே நாம்.

அங்கு அம்மா வெறும் சும்மா.

"அன்னையின் ஆணை" படம் பார்த்த போதும்
நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும்
ரசித்து போற்றினோம்

அன்னை அங்கு வரவில்லை

"தாயில்லாமல் நானில்லை" என்று
வாத்தியார் வாயசைத்து நடித்தபோதும்
நாம் வாயில் ஈ நுழைந்தது தெரியாமல்
படம் பார்த்தோம்.

மேலும்

நன்றி மன்னை சுரேஷ் அவர்களே. 23-Feb-2020 2:48 pm
அருமை கவிஞரே! 23-Feb-2020 2:23 pm
ருத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2020 1:54 pm

சாய்வு நாற்காலி........
===========================ருத்ரா இ பரமசிவன்


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
என்று
நாலாங்கிளாஸில் சத்தம் போட்டு படித்தோம்.

ஒன்றும் புரியவில்லை.

"அன்னையும் தந்தையும் தானே"...
அப்போதும் எம்.கே.டி.பாகவதரின்
கணீர்க்குரலில் வடிந்த தேனை
நக்கியவர்களாக மட்டுமே நாம்.

அங்கு அம்மா வெறும் சும்மா.

"அன்னையின் ஆணை" படம் பார்த்த போதும்
நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும்
ரசித்து போற்றினோம்

அன்னை அங்கு வரவில்லை

"தாயில்லாமல் நானில்லை" என்று
வாத்தியார் வாயசைத்து நடித்தபோதும்
நாம் வாயில் ஈ நுழைந்தது தெரியாமல்
படம் பார்த்தோம்.

மேலும்

நன்றி மன்னை சுரேஷ் அவர்களே. 23-Feb-2020 2:48 pm
அருமை கவிஞரே! 23-Feb-2020 2:23 pm
ருத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2020 7:25 am

உன்னைக் காணாத கண்ணும்..
____________________________‍‍‍‍_____________ருத்ரா

அவளைக்"கண்டதில்லை."
விரல்கள் ப்ரெய்லி ஆயின.
சிலிர்ப்பாய் ஒரு
மின்னல் தாக்கியது
தடவு மொழியில்
தடவு இன்பம்.
கண்டேன் கண்டேன்
அந்த
எழுத்துக்கள்
அவள் "பெயர்"


______________________________________________

மேலும்

ருத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2020 12:32 pm

அழல் நெய் கலிங்கம்.

=============================================குரவமும் மரவமும் கொழுநிழல் தூஉய்

வேங்கை வரிய சூர்நனி இருட்சுரம்

கடாஅத்த அகலம் மள்ளல் பொருதாங்கு

நிலம் அதிர் பொறி கழல் ஒலித்த செய்தியில்

குறி இடம் விரைய மெல் இறை நெகிழ

அவிழ் விழி அம்பில் காதல் தைப்ப‌

கழைபடு அடுக்கத்து நாடன் நந்தும்

ஆரிடை ஏகினள் அவிர்தரு மாமை

அழல் நெய் கலிங்கம் உரிஉடுத்தன்ன‌

நோன்ற நோக்கில் காடு பெயர்ந்தாள்.

"வேலாண்டான்" அவள் வேல்விழி தாண்டான்

ஆழ் விழி ஆழம் தோற்றான் வென்றான்.


========================================ருத்ரா
அழல் நெய் கலிங்கம்....பொழிப்புரை

மேலும்

ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2019 3:26 pm

காதல் என்றால் என்ன?
===============================================ருத்ரா

நம்ம பொண்ணு ஒரு பையனை
காதலிக்கிறாள்.
என்ன செய்யலாம்?

இது அப்பா.

என்னங்க இது ஒரு கேள்வியா?
நம்ம கல்யாணமும்
இப்படித்தானே நடந்தது.

இது அம்மா.

அப்போ நான்
ஒரு காதலன் மட்டும் தான்.
இப்போ நான் ஒரு அப்பா.

இதுவும் அதே அப்பா தான்.

அதனால அந்தஸ்து அது இதுன்னு
பாக்கப்போறீங்களா?

இது கோபத்துடன் அம்மா.

ஆமாண்டி ஆமா.
கௌரவம் தான் முக்யம்.
இந்த கண்ணராவியெல்லாம்
சரிப்படாது.

இது ஒரு முடிவோடு பேசும் அப்பா.

.................
..................

சரி
நாளைக்கு நமக்கு பொண்ணு பிறந்து
அது காதலிச்சுட

மேலும்

தங்கள் கணிப்பு சரியே நன்றி நண்பரே 02-Dec-2019 12:33 am
ஆழமில்லா காதலை வாழ்க்கையாய் அரங்கேற்ற ஒத்திகை ... என நினைக்கிறேன் . நல்ல கற்பனை !! 01-Dec-2019 8:39 pm
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2019 2:02 pm

உனக்கு ஒரு கடிதம்.
=================================================ருத்ரா

அன்பே
உனக்கு ஒரு கடிதம்.
காகிதத்தை
நாலாக எட்டாக மடித்து மடித்து
அனுப்பியிருக்கிறேன்.
நீ
பிரித்து படிக்கும்போது தான்
தெரியும் வலி எனக்கு.
மடித்து மடித்து அனுப்பியிருப்பது
அது என் இதயம் அல்லவா?

=============================================

மேலும்

நன்றி நண்பரே ஒரு கூழாங்கல்லை இமயம் என்று நினைத்துக்கொண்டு மேலும் மேலும் ஏறிக்கொண்டு இருப்பது தானே கவிதை! --------------------------------------------ருத்ரா 29-Nov-2019 9:02 pm
இன்னும் சற்று முயற்சி செய்யுங்கள்.... 29-Nov-2019 6:51 pm
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2019 11:56 pm

சிரித்துக்கொண்டே இரு
============================================ருத்ரா

சிரி..சிரி..சிரி
சிரித்துக்கொண்டே இரு
அன்பே!
நட்சத்திரங்களை கூடையில்
பொறுக்கிக்கொள்ள முடியாமல்
அந்த தேவேந்திரன்கள்
திக்கு முக்காடட்டும்!

=================================

மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:34 pm
மிக்க நன்றி நண்பரே 28-Nov-2019 1:42 pm
இதைப்போல இன்னும் எழுதுவது தமிழ்க் கவிதைகளின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. 28-Nov-2019 8:41 am
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Sep-2017 7:00 am

நம்பிக்கை
========================================ருத்ரா

எழுந்துகொண்டு விட்டேன்
போர்வைக்குள்ளிருந்து உதறி.
கனவுச்சதையின் மிச்சம்
கண் இமைகளில் பனிபோல்
கவ்விக்கிடந்தது.
விழிப்பின் கத்திமுனை
அறுக்கக் காத்திருக்கிற‌து.
துண்டு துண்டுகளாய்
இந்த சுறாக்களுக்கு உணவாக.
இன்னுமா என் மீது இரவுக்கடல்
கொந்தளிக்கிறது?
பகல் நேரத்துக்கடமைகளும் கவலைகளும்
பள பளக்கிறது
"கில்லட்டின்" போல.
மறுபடியும் கால்களை உதைத்து உதறி
எழுந்திருக்கிறேன்.
ஜிவ்வென்று
என்னக்குள்ளிருந்து மனத்தின்
ஒரு அசுரக்கை முளைத்தது.
தன் முஷ்டியால்ஓங்கி ஒரு குத்து
அந்த பேய்களின் முகத்தில்.
என்ன செய்துவிட்வாய்?
என்னைத்தின்

மேலும்

வாழ்வியல் சிந்தனைக்கு கருத்துக்கள் தங்கள் படைப்பு போற்றுதற்குரிய விழிப்பு உணர்வு உண்டாக்கட்டும் கலாம் கனவை நனவாக்குவோம் பாராட்டுக்கள் 21-Sep-2017 4:22 am
நீர் ஊற்றும் மேகங்கள் போல மனிதனுக்குள் நம்பிக்கைகள் 18-Sep-2017 12:10 am
அன்பு நண்பர் திரு.இளவெண்மணியன் அவர்களே மனிதனின் மன எழுச்சி அவன் மனத்துள் ஒளியாகவும் அவனுக்கு ஒரு நிழல் ஆகவும் இருக்கிறது.அதை அவன் மொழி பெயர்க்கும் போது அது நம்பிக்கை எனப்படுகிறது. உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. அன்புடன் ருத்ரா 16-Sep-2017 10:28 pm
சிந்தனை வீச்சு சிறப்பு ! 16-Sep-2017 8:33 am
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 11:46 am

குப்பைத்தொட்டியில் வீசப்படுபவை

===========================================ருத்ரா


ஆம்

மதமாற்றம் தான் என் நோக்கம்.

மனிதனின் மதத்தை அல்ல...

கடவுளின் மதத்தை.

உயர்வான மனிதத்தை

வெறும் அச்சுப்பிழைக்குப்பைகள் என்று

அந்த தொட்டிக்குள் வீசப்பட செய்வதற்கு

அந்த கடவுளுக்கு

என்ன உரிமை இருக்கிறது?

கை கால்கள் அழுகவிட்டு

அழகு பார்த்து அழவைப்பதற்கு

எவர் கொடுத்தார் அந்த உரிமையை?

நீங்கள் வேண்டுமானால்

அந்த குறியீடுகளை

அந்த ஸ்தோத்திர வசனங்களை

அந்த பஜனைப் பாட்டுகளை

நாமாவளிகளை

குவித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உரிக்க உரிக்க‌

வர்ணங்கள் மட்டுமே

உங்கள் சந்நி

மேலும்

மிக்க நன்றி திரு.முகமது சர்பான் அவர்களே. அன்புடன் ருத்ரா 05-Apr-2015 6:01 pm
முதலில் என் கைதட்டல்கள் அழகான படைப்பு ஆழமான வரிகள் வாழ்த்துக்கள் 01-Apr-2015 11:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜெகதீஷ்

ஜெகதீஷ்

சென்னை
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (40)

sankarsasi

sankarsasi

chennai
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (41)

இராமகிருஷ்ணன் வெ

இராமகிருஷ்ணன் வெ

திருப்பூர்
பூந்தளிர்

பூந்தளிர்

சிதம்பரம்

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே