மவுனம் பேசியதே

மவுனம் பேசியதே.
__________________________________

கண்ணும் கண்ணும் பேசியது.
கடல்களின் அழம் தெரியவில்லை.
வாய்ச்சொற்கள் குழரின.
இனிய தமிழ் ஈப்ரு ஆனது.
மவுனம் நீண்டது..அகன்றது
அண்டவெளிகள் கூட‌
சிமிழுக்குள் அடைந்தன்.
என்ன தான் பேசினர்?
என்ன தான் பார்த்தனர்?
அருகே வேப்பமரத்துக் குயில்கள்
மொழி பெயர்த்தன.
"பூக்காரி இன்னும் வரவில்லை.
வந்தவுடன்
ஒரு ரோஜாவை நீட்டி...."
அவன் முடிக்க வில்லை.
அவள்
பட்டென்று நீட்டினாள்
அவள் திருமணப் பத்திரிகையை.

____________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன்(சொற்கீரன்) (13-Sep-25, 6:53 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 63

மேலே