தை மகளே வருக நலன்கள் யாவும் தருக
தை மகளின் வருகையால்
பொங்கட்டும் பொங்கல் நம் இல்லங்கள் எங்கும்
மகிழ்ச்சி தங்கட்டும் நம் உள்ளங்கள் எங்கும்
உவகையுடன் சொல்வோம்
பொங்கலோ பொங்கல்...
இந்த நன்னாளில் நம் கலையும் கலாச்சாரமும்
பண்பும் பண்பாடும் பொங்கட்டும் நம் தமிழர் நெஞ்சங்களில்
கரும்பென இனிதே சொல்வோம்
பொங்கலோ பொங்கல்...
புதுப்பானை புது அரிசி
புதுப்பருப்பு பசும்பால் புது வெல்லம் கலந்து
பொங்கட்டும் பொங்கல் ஊரெங்கும்
சமத்துவமாய் சொல்வோம்
பொங்கலோ பொங்கல்...
இந்த பொங்கல் நன்னாளில்
நிலம் நீர் நெருப்பு காற்று வானம்
மாடு மாட்டுவண்டி உதவியுடன்
தன் அயரா உழைப்பையும் கலந்து
உலகின் பசிபோக்கிய கண்கண்ட தெய்வம்
உழவனை வணங்கி பெருமையோடு சொல்வோம்
பொங்கலோ பொங்கல்...
வீடும் நாடும் ஓங்கி வளர பொங்கலோ பொங்கல்...
உற்றர் உறவினர் ஒற்றுமை ஒங்க பொங்கலோ பொங்கல்...
சாதி மத பேதமின்றி சமத்துவம் ஓங்க பொங்கலோ பொங்கல்...
பஞ்ச பூதங்களும் சாந்தமாக இருக்க பொங்கலோ பொங்கல்...
பசி பட்டினி நோய்நொடி ஒழிய பொங்கலோ பொங்கல்...
அகமும் புறமும் அறத்தொடு வாழ பொங்கலோ பொங்கல்...
நீர்நிலைகள் மண்வளங்கள் மாசுபடியாமல் இருக்க பொங்கலோ பொங்கல்...
கன்னிப்பெண்கள் கனவுகள் பலிக்க பொங்கலோ பொங்கல்...
மாணவ மாணவிகள் கல்வியில் சிறக்க பொங்கலோ பொங்கல்...
முதியோர்கள் முகத்தில் புன்னகை ஜொலிக்க பொங்கலோ பொங்கல்...
ஏழை எளியோர்கள் ஏற்றமாய் வாழ பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ் ...
.

