கண்களால் கைது செய்
1.கண்களால் கைது செய்யப்பட்ட காதலர்கள் வாழ்கிறார்கள் இதயச் சிறைக்குள்..
ஆயுள் கைதிகளாக ..
காதலின் சுகமான தண்டணைகளை அனுபவித்த படி!
2. சகியே..
என்னை கண்களால் கைது செய்கின்ற உன் கண்கள் அறிவதில்லை..
தன் குளிர் பார்வையால் காதல் தீ பற்றி எரியும் என் தேகத்தின் வேதியியல் மாற்றத்தை!!

