meenatholkappian - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : meenatholkappian |
இடம் | : |
பிறந்த தேதி | : 05-Feb-1965 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 206 |
புள்ளி | : 68 |
1. பலருடைய சோகத்தை மறைப்பதற்கு கவசமாகிறது
இன்றைய சிரிப்பு..
2. சொந்தமானாதுதான் சிரிப்பு
இதழுக்கு என்றாலும்..
மெய்யான சிரிப்பு
இதயத்திற்கே சொந்தமானது..
3. இலவசமான. சிரிப்பை
செலவு செய்வதில்
சிக்கனம் ஏன்?
4. தொலைந்து போய்விட்ட
சிரிப்பின் முகவரியை
தேடிக்கொண்டிருக்கிறேன்
இன்றுவரை...
5. ' அழகு' 'பேரழகாகிறது'
சிரிப்பை அணியும் போது!
6. எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் மலர்களே
கவலையை களவிச்செல்கின்றன...
என்னை நனைத்து சிலிர்த்தது மழை!
என்னை தழுவி மகிழ்ந்தது காற்று!
என்னை வரவேற்று சிரித்தது மலர்!
என்னை மயக்கி சிவந்தது அந்தி!
என்னை பார்த்து கண் சிமிட்டியது விண்மீன்!
என்னைத்தேடி தேய்ந்தது இரவில் நிலவு!
நிழல் எண்ணங்கள் நிஜமாகுமோ?
எண்ணி மகிழ்ந்தேன் அழகிய தருணங்களை!!
1. இன்பத்தில் இழைந்துவிட்டு
துயரத்தில் தூரமானாய்
நிஜமென நம்பிய உறவு
நிழல் உறவானதே...
2. அன்பே..
உன் நிழல் நான் ..
இல்லை இல்லை!
நிழலானால் ஒருவரான நாம்
இருவராவதால்...
3. முன்னும் பின்னும்..
வலமும் இடமும்...
அடியுமாகி இருந்தாலும்..
நிஜத்தில் நிழல்
கானல்நீரே...
4. இணைந்து பயணித்தாலும்..
அறியாது நிழல்
நிஜத்தின் உணர்வுகளை..
பூவே...
உன்னோடு போட்டி போட
விரும்பாததால்
வருகிறது நிலவு இரவில்...
பூவே...
அழகை அள்ளிக்கொடுத்த ஆண்டவன்
உன் ஆயுளில் சிக்கனம் காட்டியது ஏனோ?
காற்றிடம்
தன் மணத்தை பறி கொடுக்கும்
பூக்கள் கேட்பதில்லை
காற்றின் முகவரியை!!
பூவே..
உன் மென்மையை அறிய..
பூவாகத்தான் பிறக்க வேண்டும்
நானும்...
நதிக்கரையில் நாணல்புல் நாட்டிய மாடும்
***நடைபழகும் தென்றல் நறுமணமாய் வீசும் !
மதிவரவைக் கண்டால் மலர்ந்திடு மல்லி
***மயக்கிடும் நெஞ்சம் மகிழ்வினைச் சொல்லி !
அதியழகு மாலைதான் ஆனந்தம் சேர்க்கும்
***அரும்புகின்ற ஆசையிலே ஐம்புலனும் தோற்கும் !
உதிராத பூவாசம் உள்ளத்தை யள்ளும்
***உணர்வுகளில் ஊற்றெடுக்கும் உற்சாகம் தானே !
( வெண்டளையான் இயன்ற எண்சீர் விருத்தம் )
ஏதோ ஒரு தருணத்தில்
தன் தனித்தன்மையை
தவறாமல் உண்ர்த்தும்
தனிமை!
தனிமையை அழிப்பது
நட்பெனும் உணர்வே!
தனிமையே...
தங்கி விடாதே..
உன் ஆசைக்கு
சிறிது நேரம் பிடித்துவிட்டு
சென்று விடு!
எப்போது வந்தாலும்
எத்தனை முறை வந்தாலும்
தனிமை அழையா விருந்தாளியே!
சேர்ந்து நகரும்
கடிகார முட்களை நோக்கி
தனிமையில் நான்..
கண்டேண் உனை நான் ஒரு நாளே..
அதுவே எனக்கு திருநாளே!
மனதில் புகுந்து ஆட்கொண்டாய்..
மணத்திலும் இணைந்து எனைக்கொண்டாய்!
மனதில் உதித்த என் ஆசைகள்..
மௌனத்தில் கலக்கும் அதன் ஓசைகள்!
சொல்லாமல் அடைந்தன. உன்னிடம்..
கேளாமல் நிறைவேற்றுவாய் அவ்விடம்...
கனவுகள் நிஜமாவது கண்டு...
அதிசயித்து நான் நின்றதுண்டு!
ஆல் போல் உறவு கிளைகள்..
வேறூன்றும் உன்னருகே அதன் விழுதுகள்..
முதியோர் தனை பேணிக்காக்க
கற்க வேண்டும் உன்னிடம் வி.ரைவாக!
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை..
இனிதாக்கியது உன் சேர்க்கை!
அடைந்தேன் உனை முற்பிறவியின் பயனால்..
அடைவேன் உனை மறுவிலும் புண்ணியத்தால்...
பெயரில் நீ கொண
கார்முகில் நீலவானத்தை மூட..
சில் என வாடைக்காற்று மேனியை தீண்ட ..
மழைத்துளி வேகமாய் மன்னைசேருமே !
மண்வாசம் இதமாய் சுவாசத்தில் ஏறுமே !
மின்னல் மின்னி இடியும் ஒலிக்கும்,
துளிகள் பூமியில் ஜலதரங்கம் வாசிக்கும் !
ஊசியாய் மழைத்துளி மேனியை சீண்டும் ...
தீண்டலின் சுகத்தால் மனமும் வேண்டும்!
மழைத்துளி தொட தொட சிலிர்த்தது மலர்கொடி..
பூமியின் தாகமும் வான்மழையால் தீர்ந்ததடி !
பச்சை கம்பளமும் பாய்ந்தோடும் நீரோடையும்..
சொர்க்கமாய் மாறும் பூமியின் மேலாடையும் !
வான்மழையின் தூதாய் தட்டான்கள் வட்டமிடும்..
வந்த மழை நின்றதும் ஈசல்கள் கொட்டமிடும் !
ஆனந்த வெள்ளத்தில் தவளைகள் கொரகொரக்கும்..
வண
விடிந்தும் விடியாத பொழுதினில் ...
மலர்ந்தும் மலராத மலரினில் ...
அமர்ந்தும் அமராத நிலையினில் ..
ஒரு துளி ! சிறு துளி ! பனித்துளி !
அரும்பே ! அரும்பே ! அருமை அரும்பே !
மலராய் 'மலராய் ' இன்று நீ அரும்பே !
மன்றாடியது பனித்துளி தன் வெட்கத்தை விட்டு !
மலர்வதே அரும்பின் இயற்கை என்பதை மறந்துவிட்டு ?!
இதழ் விரித்து அரும்பு மலர்ந்தது ..
தன் விதியை நொந்து பனித்துளி விழுந்தது ..
மறைய வேண்டாம் மண்ணுள் நட்பு ..
என்று சிறுபுல் தாங்கி தந்தது பாதுகாப்பு !
களைப்பில் ஆழ்ந்தது பனித்துளி நித்திரையில் ..
ஆதவன் அணைக்க கரைந்தது காற்றுதனில் !
ஒவ்வொரு முறை காற்று தன்னை கடக்கும் போதும் ...
தலை வணங்கும
சாரல் ...
மூன்றெழுத்து வார்த்தைக்குள்
மறைந்திருப்பது
மழையின் அழகு !
என்னை தீண்டிவிட
துடிக்கும் மாமழையே
மன்னிப்பாயாக
குடையுடன் சென்றது என் பிழையே !
மழையில் நனையும்
ஆசையை
குடைக்குள் மறைக்கிறோம் !
மழை எனும் இரண்டு எழுத்து சொல்
பிழை இல்லாமல் அழகு என
பொருள் கொள்கிறது
சாரல் எனும் முன்றெழுத்து தமிழில் !
தூரலில் தொடங்கி
சாரலில் தொடர்ந்து
மண்ணுள் மடியும் மழை.
நம் மீது படர்ந்திருக்கும்
கரைகளை அழிக்க
அனுப்பி வைத்தானோ
இறைவன் மழை சாரலை ! ...
மூன்று எழுத்து தமிழ் வார்த்தையில் ..
மறைந்திருப்பது
வாழ்கையின் அகராதியே!
நுண்ணிய உணர்வுகளின் புரிதலில் நீ ...
புரியாத உணர்வுகளின் சிக்கலில் நான்!
நிகழ்கால நடவுகளில் நீ...
கடந்த காலத்திலும் எதிர் காலத்திலும் நான் !
அன்பு ,அரவணைப்பு தேடலில் நீ...
பேரும் புகழும் தேடலில் நான் !
வாழ்கிறோம் நன்றாகவே எதிரும் புதிருமாய்...
காலமெல்லாம் ஈர்ப்பது தான் என்னவோ?