ஓர் மழை நாளில்

கார்முகில் நீலவானத்தை மூட..
சில் என வாடைக்காற்று மேனியை தீண்ட ..
மழைத்துளி வேகமாய் மன்னைசேருமே !
மண்வாசம் இதமாய் சுவாசத்தில் ஏறுமே !

மின்னல் மின்னி இடியும் ஒலிக்கும்,
துளிகள் பூமியில் ஜலதரங்கம் வாசிக்கும் !
ஊசியாய் மழைத்துளி மேனியை சீண்டும் ...
தீண்டலின் சுகத்தால் மனமும் வேண்டும்!

மழைத்துளி தொட தொட சிலிர்த்தது மலர்கொடி..
பூமியின் தாகமும் வான்மழையால் தீர்ந்ததடி !
பச்சை கம்பளமும் பாய்ந்தோடும் நீரோடையும்..
சொர்க்கமாய் மாறும் பூமியின் மேலாடையும் !

வான்மழையின் தூதாய் தட்டான்கள் வட்டமிடும்..
வந்த மழை நின்றதும் ஈசல்கள் கொட்டமிடும் !
ஆனந்த வெள்ளத்தில் தவளைகள் கொரகொரக்கும்..
வண்ண வண்ண வான வில்லால் மனமும் பரபரக்கும் !

வான்மழையின் ஆயுளுக்கு கார்மேகமே எல்லை !
அழகுதனை வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை !
நின்றபின் ஏங்கும் மழைக்காக மனமும் ,
மீண்டும் மழை வர வேண்டினேன் தினமும் !!

எழுதியவர் : meenatholkappian (13-Jan-16, 7:40 pm)
Tanglish : or mazhai nalil
பார்வை : 121

மேலே