சுமுக்-க அமுக்கச் சொல்லு

'சுமுக்'க 'அமுக்'கச் சொல்லு

உங்க பொண்ணு எங்க மல்லிகை?

@@@@@@@@@@@
மகளிர் கல்லூரில இரண்டாம் ஆண்டு பட்ட

வகுப்புப் படிக்கிறாள்.

@@@@@@@@@@@@


படிப்பு முடிஞ்சதும் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கிற


மாதிரி.....



@@@@@


முதல்ல படிப்பு முடியட்டும். பிறகு அதைப் பற்றி யோசிப்போம்.


@@@@@@@@@@@@@@

இல்ல எங்க அக்கா பையன் எம்.டெக் படிச்சிட்டு வெளிநாட்டில


வேலை பார்க்கிறான். அவனுக்கு உங்க பொண்ணைக்

கேட்கலாம்னு தான் வந்தேன் மல்லிகை.

@@@@@@@@@@@

என்ன துறையில வேலை பார்க்கிறான் உன்னோட அக்கா

மகன்?


@@@@@@@@@@@@


என்ன துறையா? பணத்தை அள்ளிக் கொட்டும் மென்பொருள்

துறை தான்.

@@@@@@@@@@

மென்பொருள் துறையா? வேற இடம் பாரு தாமரை.

@@@@@@@@

மாதம் பத்து இலட்சம் சம்பளம் வாங்குறான்.

@@@@@@@@@

அவன் மாதம் பத்துக்கோடி சம்பளம் வாங்கினாலும்

பரவாயில்லை. நம்ம ஊரு நடப்பைச் செய்தித் தாள்கள்ல

படிச்சதுக்கு அப்பறம் அந்தத் துறையே வேண்டாம்னு எங்க

பொண்ணு சொல்லிட்டா.

@@@@@@@@@@

அதெல்லாம் சொல்லற விதத்தில சொன்னா உங்க பொண்ணு

சரின்னு சொல்லிடுவா. ஆமாம, உங்க பொண்ணு பேரு என்ன


மல்லிகை?

@@@@@@

எங்க பொண்ணோட பேரு 'தம்மா' (Tamma).

@@@@@@@@@@@@

கன்னடப் பேரா, தெலுங்குப் பேரா, சிந்திப் பேரா?

@@@@@@@@@@@@

இந்திய மொழிப் பேரே இல்லை. வெளிநாட்டுப் பேரு.


பெரும்பாலான தமிழர்கள் அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப்


பேரை வைக்கிறாங்க. சில புதுமை விரும்பிகள் இந்திப் பேருங்க

மாதிரி உள்ள பேருங்கள உருவாக்கி அவங்க பிள்ளைகளுக்கு

வைக்கிறாங்க. மொதெல்லாம் கிருத்திகா. இப்ப கிருத்தியா.

அர்த்தமில்லாத பேருங்கள இந்தியாவின் எல்லா மொழிகளிலும்

வைக்கற வழக்கம் அதிகமாயிருச்சு.

@@@@@@@@@@@@@@


நீங்க உங்க பொண்ணுக்கு எந்த மொழிப் பேரை

வச்சிருக்கிறீங்க?

@@@@@@@@@

இஸ்ரேலியர்கள் பேசற ஹீப்ரு மொழிப் பேரு தான் 'தம்மா'.

'தம்மா'னு எங்க பொண்ணைக் கூப்படற போது எவ்வளவு

இனிமையா இருக்குது தெரியுமா தாமரை.

@@@@@@@@@@

ஆமாம் மல்லிகை "தம்மா ஈஸ் எ ஸ்வீட் நேம்". எங்க அக்கா

பையன் பேரு 'சுமுக்'. சமஸ்கிருதப் பேரு.


@@@@@@@@@@@@

'சமுக்'கும் ஸ்வீட் நேம் தான் தாமரை. 'சுமுக்'கு மென்பொருள்

துறையில வேலை பார்க்கிற பொண்ணைப் பார்த்து 'அமுக்'கச்

சொல்லு. எங்க பொண்ணைத் தரமுடியாது, எங்க பொண்ணுக்கு


வெளிநாட்டு வாழ்க்கையும் வேண்டாம்.

@@@@@@@@@@@@

சரி நான் வர்றேன் மல்லிகை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Name Tamma generally means Perfect is a Feminine (or Girl) name. Name Tamma has Hebrew origin.

##############

Sumuk = Lord Ganesh

எழுதியவர் : மலர் (30-Jun-25, 8:31 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே