நோட்டு புத்தகம்
நோட்டு புத்தகம்...
24 / 08 / 2025
நான் ஒரு நோட்டு புத்தகம்.
சிலர் அழகாய் அதில்
கவிதை எழுதுகிறார்கள்
சிலர் அலங்கோலமாய்
கிறுக்குகிறார்கள்
சிலர் ஓவியம் வரைகிறார்கள்
சிலர் வாழ்த்துப்பா
படைக்கிறார்கள்
சிலர் வசைபாடி
இரங்கற்பா வடிக்கிறார்கள்
சிலர் சிறுகதை
எழுதுகிறார்கள்
சிலர் தொடர்கதை
தொடருகிறார்கள்
சிலர் நக்கலடித்து
நகைக்கிறார்கள்
சிலர் கண்ணீர் துடைத்து
கவனிக்கிறார்கள்
சிலர் பக்கங்களை
கிழிக்கிறார்கள்
சிலர் கிழிந்ததை
தைக்கிறார்கள்.
இப்படி வேண்டியது
வேண்டாதது
நிரம்பிக் கிடைக்கும்
கலைக்களஞ்சியம்
நான்.
சில சமயம்
நானே கிறுக்கிக்
கொள்வதுமுண்டு